
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும்தான். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அதைச் செய்வதற்குதான் பலரும் நேரம் வாய்ப்பதில்லை. சிலர் நேரமிருந்தாலும் அதற்கென ஒதுக்குவதில்லை.
ஆனால் நாம் அன்றாடம் செய்யும் செயல்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக ஒரு சில மாதங்களில் மாற்றத்தைக் காண முடியும்.
என்ன செய்ய வேண்டும்?
தினமும் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அரிசி உணவுகளைவிட இவை அதிகமாக இருக்க வேண்டும்.
உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.
மறுபுறம் பிஸ்கட், சிப்ஸ், ஃபிரன்ச் ஃபிரைஸ், பீட்சா, பர்கர் போன்ற ஒன்றுக்குமில்லாத கொழுப்பு உணவுகளைச் சாப்பிடாதீர்கள். அதேபோல இனிப்புகளையும் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்.
உப்பு, எண்ணெய்யை முடிந்தவரை உணவில் குறைக்க வேண்டும். சர்க்கரை கூடவே கூடாது.
வீட்டிலோ அலுவலகத்திலோ படிகளில் ஏறி இறங்குவது, எழுந்து அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கை, கால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப் பயிற்சி என செய்ய வேண்டும்.
பலரும் வேலைக்கு இடையே தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுவார்கள். அது தவறு, தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். வெந்நீர் குடிப்பது நல்லது.
டீ அல்லது காபியை முற்றிலும் தவிர்க்கலாம் அல்லது குறைக்கவாவது செய்யலாம்.
புகைப் பிடித்தல், மது அருந்துதல் விட்டுவிட வேண்டும்.
இரவு தூங்குவதற்கு முன்பும் காலை எழுந்தவுடனும் மொபைல் போன் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் கண்டிப்பாக வேண்டும்.
இரவு நேரங்களில் சாப்பிடுவது கூடாது.
காலை வெயிலில் உடலுக்கு அவசியத் தேவை. சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
இறுதியாக மன அமைதி மிகவும் முக்கியமானது. எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்துவிடுங்கள். உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடியவர்களுடன் நேரம் செலவிடுங்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு காணுங்கள் அல்லது அப்படியே விட்டுவிடுங்கள். மனதை இலகுவாக வைத்துக்கொள்ளுங்கள்.
அவ்வப்போது உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.