
புரதம் என்றாலே நமக்கு முட்டை மட்டும்தான் ஞாபகத்துக்கு வரும். முட்டையில்தான் அதிக புரதம் இருப்பதாகவும் அதை தினமும் உடலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பரிந்துரைக்கிறார்கள்.
முட்டையில் புரதம் அதிகம் இருப்பது உண்மைதான். ஆனால் அதைவிட இந்திய பாரம்பரிய உணவுப் பொருள்களிலும் புரதம் அதிகம் இருக்கிறது.
சாதாரணமாக ஒரு முட்டையில் 6 -7 சதவீதம் புரதம் உள்ளது.
ஆனால் கொண்டைக்கடலையில் அதைவிட அதிக புரதம் உள்ளது. 100 கிராம் கொண்டைக்கடலையில் 19 கிராம் புரதம் உள்ளது. சன்னா மசாலா, குழம்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்தும் உள்ளது.
100 கிராம் பருப்பு வகைகளில் 25 கிராம் புரதம் உள்ளது. முட்டையைவிட அதிக புரதம் உள்ள பருப்புகள் இந்திய சமையலில் தவிர்க்க முடியாதவை. மேலும் இதில் போலேட் அதிகமுள்ளதால் இதயத்திற்கு நல்லது என்று ]கூறுகிறார்கள்.
சோயா ஜங்க்ஸ் 100 கிராமில் 52 கிராம் புரதம் உள்ளது. உணவுகளிலேயே அதிக புரதம் உள்ள பொருள் இதுதான்.
100 கிராம் பன்னீரில் 18-20 கிராம் புரதம் இருக்கிறது. இதில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளுக்கு நல்லது. மேலும் குறைந்த கலோரி உணவாகும்.
நிலக்கடலை 100 கிராமில் 26 கிராம் புரதம் உள்ளது. ஸ்நாக்ஸ் ஆகவும் சட்னியாகவும் சாப்பிடலாம். நல்ல கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகம் உள்ளன.
100 கிராமில் 24 கிராம் புரதம் உள்ள பச்சைப்பயறை அவித்து அப்படியே சாப்பிடலாம், குழம்பு அல்லது கிரேவியாகவும் சாப்பிடலாம். முளைகட்டியும் சாப்பிடலாம். இது செரிமானத்தைத் தூண்டுகிறது.
கருப்பு உளுந்து 100 கிராமில் 25 கிராம் புரதம் உள்ளது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பால் பொருள்கள், கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றிலும் புரதம் அதிகம் உள்ளது.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
இதையும் படிக்க | கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.