பணத்தை சேமிக்க வேண்டும், வாழ்க்கையில் சீக்கிரமாகவே ஓய்வெடுக்க வேண்டும் என்பதே பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் பெரும்பாலானோருக்கு ஓரளவு வருமானம் இருந்தாலும் சேமிக்கத் தவறிவிடுகின்றனர். வரவுக்கேற்ற செலவு இருக்க வேண்டும், அதாவது வரவில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்துவிட்டு பின்னரே செலவுக்கான தொகையை எடுக்க வேண்டும், பொருளாதாரம் சார்ந்த நிபுணர்கள் இதனையே வலியுறுத்துகின்றனர்.
இதனால் பலரும் தற்போது முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பணத்தைச் சேமிக்கவும் முதலீட்டை அதிகரிக்கவும் நிபுணர்கள் கூறும் சில யோசனைகள்....
இலக்கு தேவை
நீங்கள் சேமிப்பது என்றாலும் சரி, முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் சரி முதலில் அதற்கான இலக்கு தேவை. நீங்கள் சேமிப்பதற்கான நோக்கம் என்ன என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். வீடு, வாகனம் வாங்குவதற்கா அல்லது ஓய்வூதியத்திற்காகவா, குழந்தைகளின் கல்விக்காகவா என முதலில் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
பல பிரிவுகளில் முதலீடு
பணத்தை ஒரே பிரிவில் இல்லாமல் பல பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்யுங்கள். தங்கம், நிலம், பங்குகள், கடன் பத்திரங்கள் என இருக்கும் தொகையைப் பிரித்து முதலீடு செய்யுங்கள். இது உங்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருக்கும். பங்குகளில் லாபம் குறைந்தால் நிலத்தில் லாபம் அதிகரிக்கலாம்.

ANI
நீண்ட கால முதலீடு
முதலீடு என்பது நீண்ட காலத்திற்கானதாக இருக்க வேண்டும். குறைந்தது ஒரு 15 ஆண்டுகளுக்காவது உங்களுடைய முதலீட்டை மறந்து விடுங்கள். அப்போதுதான் அதிக லாபம் பெற முடியும்.
பங்குச் சந்தை
பங்குச் சந்தை முதலீடு என்றால் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். பகுத்தறிவுடன் இருப்பதும் அவசர முடிவுகளைத் தவிர்ப்பதும் முக்கியம். பயமும் பேராசையும் கூடாது.
பரிசோதனை
நீங்கள் வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யப்போகிறீர்கள் எனும்போது முதலீடு பற்றி ஆய்வு செய்வது முக்கியம். முதலீடு செய்யும் நிறுவனம் அல்லது நிதியின் நிதிநிலை அறிக்கைகள் என அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
முதலீடு கட்டணங்கள்
குறைந்த செலவிலான இன்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் ஈடிஎஃப்களைத் தேர்வு செய்யுங்கள். அதிக நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் பரிவர்த்தனைச் செலவுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

IANS
போர்ட்ஃபோலியோ
உங்கள் போர்ட்ஃபோலியோவை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். காலத்திற்கேற்ப சில முதலீடுகள் மற்றவற்றைவிட சிறப்பாகச் செயல்படும் என்பதால் மறுசீரமைப்பு தேவை.
விழிப்புடன் இருங்கள்
உங்கள் முதலீடு பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியமானது. உங்கள் முதலீடுகளைப் பாதிக்கக்கூடிய சந்தை தொடர்பான செய்திகள், பொருளாதார நிலவரம் மற்றும் அதுசார்ந்த அரசியல் நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இருப்பினும் நீண்ட காலத் திட்டமிடலில் உறுதியாக இருங்கள்.
நிபுணர் ஆலோசனை
நீங்கள் முதலீட்டிற்குப் புதியவர் என்றால் உங்களுக்கு சில தொழில்முறை ஆலோசனைகள் தேவைப்படலாம். எனவே ஒரு நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்வது நல்லது.
அனுபவம்
முதலீட்டிலும் அனுபவத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள். கடந்த கால அனுபவங்களிலிருந்து தவறுகளைச் சரிசெய்து கொள்ளுங்கள். ரிஸ்க் எடுத்து அனுபவங்களின் மூலமாக மட்டுமே நீங்கள் வெற்றியடைய முடியும்.
Summary
Are you planning to invest, know these 10 things
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இணையதள வா்த்தகத்தில் லாபம் தருவதாக மூதாட்டியிடம் ரூ.1.66 கோடி மோசடி

வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!

15 வயது சிறுவனைப் பார்த்து பயப்படுவேன் என நினைக்கவில்லை: ஜேமிசன்

மண்ணின் மைந்தரை தோ்ந்தெடுங்கள் காங்கிரஸ் முன்னாள் நிா்வாகி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


