

ஆன்லைன் மூலமாக படிப்பது/ வாசிப்பது நல்லதா? நினைவுத்திறனை மேம்படுத்துமா? கண்களுக்கு ஏதேனும் ஆபத்தா?
இதுகுறித்த தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்
ஸ்மார்ட்ஃபோன் / டிவி / லேப்டாப் மூலமாக ஆன்லைன் தளங்களில் வாசிப்பது (டிஜிட்டல் வாசிப்பு) நினைவுத்திறனை மேம்படுத்தும்.
ஆன்லைன் தளங்கள் மூலமாக ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப்பில் படிப்பது கண்டிப்பாக நினைவுத் திறனை வழங்காது. புத்தகத்தில் அச்சிடப்பட்ட எழுத்துகள்தான் நினைவுத்திறனை மேம்படுத்தும். எந்த இடத்தில் எந்த வார்த்தைகள், குறிப்புகள் இருக்கின்றன என இடம்சார்ந்த நினைவாற்றல் புத்தகத்தின் மூலமாக மட்டுமே கிடைக்கிறது.
டிஜிட்டல் வாசிப்பே வசதியானது, புத்தக வாசிப்பு காலாவதியானது
டிஜிட்டல் வாசிப்பு எளிதாக அணுகக்கூடியதாக இருந்தாலும் பலன் என்னவோ புத்தகத்துக்குத்தான். புத்தகங்களுக்கு பேட்டரிகள், அப்டேட், இணைய சேவை என எதுவுமே தேவையில்லை. ஸ்மார்ட்போன், இணையம் உதவியின்றி புத்தகங்கள் எப்போதும் படிக்கத் தயாராக இருக்கும். அதனால் புத்தகங்கள் காவலாதியானவை அல்ல. அவை அறிவுத் திறனை வழங்குவதுடன் நினைவாற்றலையும் மேம்படுத்தும்.
டிஜிட்டல் வாசிப்பு கண்களுக்கு ஆரோக்கியமானது
உண்மையில் ஆன்லைன் மூலமாக படிப்பது கண் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிக நேரம் திரையில் இருக்கும்போது நீல ஒளி காரணமாக தூக்கக் கோளாறு ஏற்படும். ஆனால் புத்தக வாசிப்பால் இந்த சிக்கல்கள் ஏற்படுவதில்லை.
டிஜிட்டல் வாசிப்பில் முழு கவனம் செலுத்த முடியும்
டிஜிட்டல் வாசிப்பில் கவனச் சிதறல் ஏற்படும், அதில் வரும் அறிவிக்கைகள், ஹைப்பர்லிங்க்குகள் மூலமாக அதிக கவனச் சிதறல் ஏற்படும்.
ஆனால் புத்தகம் கவனச்சிதறல்களைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதில் முழுவதுமாக கவனம் செலுத்தும்போது மூளையில் நன்றாகப் பதிவாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.