நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!யார் இந்த சோனம் வாங்சுக்? நண்பன் படத்தின் விஜய் கேரக்டர் கொசக்சி பசப்புகழ் இவரா?தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

உணவில் சர்க்கரையைத் தவிர்த்தால் நிகழும் அதிசயம் தெரியுமா?

உணவில் சர்க்கரையைத் தவிர்த்தால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றி...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :17 ஜூலை 2026, 3:18 pm IST

உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளைத் தவிர்க்க, குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு உணவில் சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இப்போதெல்லாம் நாம் உண்ணும் உணவு என்பது சத்துமிக்கதாக இருக்கிறதா என்பதைவிட சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கிறதா என்றே பார்க்கிறோம். அதனாலேயே உடலில் பல்வேறு பிரச்னைகள், அதுவும் இளம் வயதிலேயே ஏற்படுகின்றன.

குறிப்பாக உடல் பருமன், நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாம் 30 - 40 வயதுகளிலேயே வந்துவிடுகிறது. வாழ்க்கை முறை மாற்றங்களும் மோசமான உணவுப்பழக்கவழக்கமும் உடல் இயக்கம் பெரிதாக இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும் போதிய உடற்பயிற்சி செய்யாததுமே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

எனவே, உடலை ஆரோக்கியமாக, சரியான எடையில் வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.

அந்தவகையில் உடல்ரீதியான பல்வேறு பிரச்னைகளுக்கு இன்று சர்க்கரை ஒரு மூலக் காரணமாக இருக்கிறது.

இதனால் அதிக சர்க்கரை உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் அதன் அளவைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் அதிக சர்க்கரை - டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய்களுடன் தொடர்புடையதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் நீரிழிவு நோய்க்கு சர்க்கரை மட்டுமே காரணம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன மாற்றங்கள் நிகழும்?

சர்க்கரையின் அளவைக் குறைக்கும்போது படிப்படியாக உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதிக சர்க்கரை உணவுகளைச் சாப்பிடுபவர்கள் அதன் அளவைக் குறைக்கும்போது நல்ல பலன்களைப் பெற முடியும்.

சர்க்கரையைக் குறைப்பது உடலில் வளர்சிதைமாற்றத்தை (மெட்டபாலிசம்) சீரமைக்கும். ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தும்.

உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, கல்லீரல் கொழுப்பு, இதய நோய் ஆகிய பிரச்னைகளுக்கு 'அதிக சர்க்கரை' முக்கிய காரணமாக உள்ளது.

அதனால் சர்க்கரையைத் தவிர்ப்பதால் உடலில் கலோரி மட்டும் குறைவதில்லை. உங்கள் உடல் ஆற்றலையும் பசியையும் சரியாக நிர்வகிப்பதைக் காண முடியும்.

ரத்த சர்க்கரை அளவு சரியாக நிர்வகிக்கப்படும். வயிறு அளவு குறைவதைக் காண முடியும். உடலில் இருந்த அழற்சி குறையும், மன அழுத்தம் குறையும். தூக்கம் மேம்படும்.

சர்க்கரையைத் தவிர்க்கும்போது, சர்க்கரை உணவுகளை அதிகம் சாப்பிடத் தூண்டும். ஆனாலும் சரியாக கடைப்பிடித்தால் சர்க்கரை மீதான விருப்பம் குறைந்துவிடும்.

எந்தவொரு மாற்றத்திற்கும் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டியது அவசியம். எனவே 30 நாள்களுக்கு என்றில்லாமல் தொடர்ச்சியாக உணவில் சர்க்கரை அளவைக் குறைக்குபோது மாற்றத்தைக் காணமுடியும். 30 நாள்கள் மட்டும் சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு அதன்பின்னர் வழக்கம்போல உணவில் சர்க்கரை சேர்த்தால் எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்.

எதைத் தவிர்க்க வேண்டும்?

  • சர்க்கரையைத் தவிர்ப்பது என்றால் சர்க்கரை, வெல்லம், தேன், கருப்பட்டி போன்ற சர்க்கரை நிறைந்த பொருள்களைத் தவிர்ப்பது மட்டுமின்றி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளிலும் செயற்கை பானங்களிலும் இனிப்புகள் இருக்கும். அந்த பொருள்களை எல்லாம் தவிர்க்க வேண்டும்.

  • ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், சாஸ் ஆகியவற்றையும் நொறுக்குத் தீனிகள், பிஸ்கட், ரொட்டி என அனைத்து பேக்கரி உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

  • செயற்கை இனிப்பூட்டிகள் நிறைந்த பானங்களை அருந்தக் கூடாது. ஐஸ்க்ரீம், சாக்லேட்டும் சாப்பிடக் கூடாது.

எதைச் சாப்பிட வேண்டும்?

  • ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். அனைத்து வகையான பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம்.

  • கோழி, மீன், முட்டை ஆகிய புரத உணவுகள் சாப்பிட வேண்டும்.

  • நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் இளநீர், மூலிகை தேநீர் போன்ற இயற்கை பானங்கள் சாப்பிடலாம்.

  • பால், சர்க்கரை இல்லாத தேநீர் அருந்த வேண்டும்.

ஆய்வுகள் சொல்வதென்ன?

பழங்கள், சில காய்கறிகள், பால் பொருள்களில் குறிப்பிட்ட அளவு இயற்கையான சர்க்கரை இருக்கும். அதனை எடுத்துக்கொள்ளலாம். உடலின் இயக்கத்திற்கு சர்க்கரை குறிப்பிட்ட அளவு தேவை. சர்க்கரை அதிகமுள்ள இனிப்புள்ள பழங்களை அளவாக எடுத்துக்கொள்ளலாம்.

சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதும் ரத்த சர்க்கரை அளவு குறைதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என குவைத்தில் உள்ள தாஸ்மான் நீரிழிவு நிறுவன ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவில் கூறியுள்ளனர்.

அதேபோல நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவுக்கும் நீரிழிவு, இதயநோய் ஆகியவற்றுக்கும் தொடர்பு இருப்பதாக 2023ல் 'பிஎம்சி மெடிசின்' என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அதிகமாக தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு இதய நோய், பக்கவாதம், கல்லீரல் கொழுப்பு, நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

No sugar diet: Do you know what happens in our body

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.