நாம் பல்துலக்கும் பிரஸ் முதல் அடுக்களையில் பயன்படுத்தும் பாத்திரங்கள், சாய்வு நாற்காலி, மேஜையின் வடிவங்கள் வரை இலகுவாக பயன்படுத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதன் பின்னணியில் எர்கனோமிஸ்டுகளே உள்ளனர். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், பெரிய டி.வி, கணினி திரைகள் சுருங்கவும், மாற்றுத்திறனாளிகள் அல்லது முதியவர்கள் பயன்படுத்தும் பல்திறன் நாற்காலிகள், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் சாய்வுப் படுக்கைகள், ஸ்கேன் கருவிகள், ராணுவ தளவாடங்கள், வாகனங்கள், கல்வி நிறுவனங்களை ஆசிரியர், மாணவர்களுக்கு ஏற்ப கட்டமைப்பது போன்ற பல நவீன உத்திகள் மூலம் நாம் செய்யும் பணியை எளிதானதாகவும், பாதிப்பு இல்லாமலும், தொடர்ந்து பணியாற்ற வசதியாக இருக்குமாறும் பார்த்துக் கொள்பவர்கள் Ergonomist. இவர்களின் மற்றொரு பெயர் Human Factors Specialist.