வாசியுங்கள், இந்தக் கடிதம் ஒவ்வொரு தினமணி வாசகருக்கும் தாங்களே எழுதியதான உணர்வைத் தரலாம்...

தினமணிக்கு வாசகர் கடிதம் எழுதும், படைப்புகள் அனுப்பும் அனைவருக்குமே இந்தக் கடிதம் தாங்களே எழுதியதான ஒரு உணர்வைத் தந்து மீளலாம்.
வாசியுங்கள், இந்தக் கடிதம் ஒவ்வொரு தினமணி வாசகருக்கும் தாங்களே எழுதியதான உணர்வைத் தரலாம்...
Published on
Updated on
2 min read

ஜனவரி 23 அன்று தேசியக் கையெழுத்து தினத்தை முன்னிட்டு வாசகர்களை சொந்தக் கையெழுத்தில் கடிதம் எழுதி அனுப்பச் சொல்லி கேட்டிருந்தோம். வாசகர்கள் எழுதி அனுப்பியுள்ள கடிதங்கள் ஒவ்வொன்றும் தினமணியின் பொக்கிஷ நினைவுகள் என்பதை மறுக்க முடியாது. 

  • மிக இளம்பிராயத்தில் சில காலம் மட்டுமே பெற்றோருடன் வாழ்ந்து கேன்சரில் மறைந்த போதும் தான் வாழ்ந்த தடத்தை தன் தாயாரின் மனதில் மட்டுமல்ல இன்று தினமணி வாசகர்கள் மனதிலும் அழுந்தப் பதித்துச் சென்றுள்ள சிறுவன் குமரகுருவுக்கு அவனது அம்மா மலர்விழி எழுதிய கடிதம், 
  • தனது வருங்கால மாமியாருக்கு நேசத்தைக் கொட்டி மருமகள் எழுதிய கடிதம், 
  • பள்ளிக் காலத்தில் கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி என எழுதிக் குவித்து பரிசுகளை அள்ளிய மாணவியாக இன்று ஒரு இயந்திரத் தனமான அலுவலில் சிக்கிக் கொண்டு எழுத மறந்த தனது கரங்களுக்கு மீண்டும் எழுத வாய்ப்பளித்தமைக்கு நன்றி என ஒரு வாசகி எழுதிய கடிதம்

- உட்பட எங்களுக்கு வந்த கடிதங்கள் ஒவ்வொன்றுமே வாசிக்கும் உள்ளங்களை வெவ்வேறு விதமான உணர்வுகளால் சற்றே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டவை. 

அந்த வரிசையில் இன்று வெளியிடப்படும் இந்தக் கடிதமும் பலரது அனுபவங்களை தன்னகத்தே கொண்டுள்ளதாக இருக்கலாம். தினமணிக்கு வாசகர் கடிதம் எழுதும், படைப்புகள் அனுப்பும் அனைவருக்குமே இந்தக் கடிதம் தாங்களே எழுதியதான ஒரு உணர்வைத் தந்து மீளலாம். ஏனெனில் இந்தக் கடிதத்தில் வாசகர் ஒருவர் ஆரம்பத்தில் தினமணியைத் தொடர்ந்து வாசிக்கும் நிலையிலிருந்து வளர்ந்து பின்னர் வாசகர் கடிதம் எழுதி அனுப்பி அது பிரசுரமான ஆனந்தத்தில் தொடர்ந்து தினமணிக்கு எழுதத் தொடங்கி பின்னாட்களில் தினமணியின் படைப்பாளியாகவும் ஆன கதையைப் பகிர்ந்திருக்கிறார். இது அவருக்கு மட்டுமே மகிழ்வளிக்கும் சமாச்சாரமல்ல, தினமணிக்கும் தான். ஆரம்ப நாட்களில் வாசகராகத் தொடங்கும் தினமணியுடனான உறவை வெகு நெருங்கிய பந்துவாக படைப்பாளியாவும் மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் தினமணியில் எண்ணற்ற வாசகர்களுக்கு உண்டு. அதை இந்த வாசகரது கடிதம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. திறமை கண்டால் ஊக்குவிப்பதைக் காட்டிலும் சிறந்த செயல் வேறென்னவாக இருந்து விட முடியும்?!

இதோ வாசகரது கடிதம் உங்கள் பார்வைக்கு;

வாசிப்பு, வாசகர் கடிதம், மின்னஞ்சல், சிறப்புப் போட்டிகள், படைப்புகள் வாயிலான பங்களிப்புகள் மூலம் தொடர்ந்து எங்களுடன் இணைப்பில் இருக்கும் அத்தனை வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!

ஸ்பெஷலாக இந்தக் கடிதத்தை எங்களுக்கு அனுப்பித் தந்த வாசகர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com