எம்.குமரகுரு S/O மலர்விழி; தேசிய கையெழுத்து தினத்துக்காக வந்த உருக்கமான கடிதங்களில் ஒன்று!

இனி மலர்விழி தனது மகன் குமரகுருவுக்கு, தன் சொந்தக் கையெழுத்தில் எழுதிய கடிதத்தை வாசியுங்கள்; கண்கள் மட்டுமல்ல, உங்கள் இதயமும் சற்றுக் கசிந்து மோனத்தில் உறையட்டும்.
எம்.குமரகுரு S/O மலர்விழி; தேசிய கையெழுத்து தினத்துக்காக வந்த உருக்கமான கடிதங்களில் ஒன்று!
Published on
Updated on
3 min read

ஜனவரி 23; தேசிய கையெழுத்து தினத்தை ஒட்டி... தினமணி வாசகர்களிடையே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தோம். அதன்படி தங்களது சொந்தக் கையெழுத்தில் மனம் திறந்து மிக அருமையாகச் சில வாசகர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். அவற்றுள் மிக, மிக உருக்கமான கடிதம் இது! தனது உயிரினும் மேலான பாச மகனுக்கு அம்மா மலர்விழி லோகநாதன் எழுதிய கடிதம்...

மகன்களுக்கு அம்மாக்கள் கடிதம் எழுதுவதொன்றும் புதுமையான செயல் இல்லை. ஆனால், இந்த அம்மா, தன் உள்ளதையெல்லாம் உருக்கி கண்ணெதிரில் மகனிருப்பதாகப் பாவித்துக் கொண்டு எழுதியுள்ள இந்தக் கடிதம் நிதர்சனத்தில் என்றுமே அவரது மகனைச் சென்று சேர வாய்ப்பே இல்லாத போதும்... மகனது நினைவில் வாடும் அந்த அன்பான தாயின் ஏக்கம் இந்தக் கடிதத்தை எழுதிய காரணத்தால் ஓரளவு தீர்ந்திருக்கக் கூடும் என நம்புகிறோம். தகப்பனார் பெயர் ஜெயப்பிரகாசம் என்று அவர் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தாலும் தாயின் பெயரையும் இனிஷியலாகப் பயன்படுத்தலாம் என்பதால் தலைப்புக்கு பொருத்தமாக எம். குமரகுரு என்று சுட்டியிருக்கிறோம். கடிதம் எழுதிய அன்னை ஆட்சேபிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்! 

இனி மலர்விழி தனது மகன் குமரகுருவுக்கு, தன் சொந்தக் கையெழுத்தில் எழுதிய கடிதத்தை வாசியுங்கள்; கண்கள் மட்டுமல்ல, உங்கள் இதயமும் சற்றுக் கசிந்து மோனத்தில் உறையட்டும்.

குமரகுருவுக்கு அவரது அம்மா எழுதிய கடிதத்தின் பின் குறிப்பை வாசித்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கக் கூடும் இது அஞ்சலில் அனுப்ப முடியாத கடிதம் என்பது! இப்படியொரு சமர்த்துக் குழந்தையை இடைவழியில் இழக்க நேர்ந்தால் அதன் வலி எப்படிப்பட்டதாயிருக்கும் என உணர முடிகிறது. ஆனாலும் அன்னையர் எப்போதும், இருந்தாலும், இழந்தாலும் தங்களது பிள்ளைச் செல்வங்களை ஒருபோதும் மறப்பதே இல்லை. கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் அவர்கள் நினைவைத் தவற வேறெதுவும் தாய் மனதுக்கு சாந்தி தருவதாக இருப்பதும் இல்லை என்பதை மலர்விழியின் கடிதம் நினைவுறுத்துகிறது.

தினமணி அளித்த கடிதம் எழுதும் வாய்ப்பை மிக அருமையாகப் பயன்படுத்தி மிக உருக்கமான, அசலான கடிதமொன்றை எழுதி அனுப்பியமைக்கு மலர்விழி அவர்களுக்கு தினமணி இணையதளம் சார்பாக நன்றிகள் உரித்தாகட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com