காதலர் தினம் ஒரு நாள் அல்ல; ஒரு வாரக் கொண்டாட்டம்!

வெளி நாடுகளில் எல்லாம் பிரிந்து வாழும் சொந்தங்களையும், பந்தங்களையும் நினைவு கூறவும் தேடி அல்லது ஓடிச் சென்றுப் பார்க்கவும் 365 நாட்களையும் ஒவ்வொரு விஷயத்துக்காக ஒதுக்கினார்கள்.
காதலர் தினம் ஒரு நாள் அல்ல; ஒரு வாரக் கொண்டாட்டம்!


வெளி நாடுகளில் எல்லாம் பிரிந்து வாழும் சொந்தங்களையும், பந்தங்களையும் நினைவு கூறவும் தேடி அல்லது ஓடிச் சென்றுப் பார்க்கவும் 365 நாட்களையும் ஒவ்வொரு விஷயத்துக்காக ஒதுக்கினார்கள்.

ஆனால், வர்த்தக யுக்தியால், மெல்ல இந்த கலாசாரம் இந்தியர்களையும் சூழ்ந்து கொண்டுள்ளது. சரி கொண்டாட்டம்தானே.. அதனால் என்ன என்று மக்களும் அதற்கு பழகிவிட்டார்கள்.

அதில் ஒன்றுதான் இந்த காதலர் தினம். காதலைக் கொண்டாடாத நாடுகளே இல்லை என்ற நிலையில், காதலர் தினத்தை மட்டும் புறக்கணித்து விட முடியுமா என்ன?

மனதுக்குள் காதலித்துக் கொண்டு இதயம் முரளி போல சொல்லாமல் இருப்பவர்களுக்கும், காதலிக்கிறார் என்று தெரியும், இதுவரை சொல்லவில்லை என்று ஆதங்கத்தில் இருப்போருக்கும், லவ் பிரபோஸல் முதல் லவ் பிரேக் வரை பல விஷயத்துக்கும் பிப்ரவரி 14ம் தேதி மிகக் கச்சிதமான நாளாக அமைந்துவிட்டது.

சரி இந்த பிப்ரவரி 14ம் தேதியை காதலர்கள் எப்படி கொண்டாடப் போகிறார்கள் என்று ஏற்கனவே திட்டமிட்டு இன்று செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள். 

மேலும் படிக்க.. காதல் என்பது எது வரை?

ஆனால், காதலர் தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டமல்ல, இது ஒரு வாரக் கொண்டாட்டமாக உள்ளது உலக நாடுகளில்.

அதாவது, இந்த கொண்டாட்டம் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நீள்கிறது.

பிப்ரவரி 7 - ரோஜாக்கள் தினம் : அழகாகப் பூத்திருக்கம் ரோஜாப் பூக்களை விட உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வேறு பரிசுப் பொருள் இருக்கவே முடியாது என்கிறார்கள் காதலில் திளைத்தவர்கள். எனவே, காதலர் தினத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாட நினைக்கும் காதலர்கள், பிப்ரவரி 7ம் தேதி தனது இணையருக்கு இந்த நாளில் ரோஜா மலரைப் பரிசளிக்கிறார்கள்.

பிப்ரவரி 8 - காதலைச் சொல்லும் தினம் : காதலைச் சொன்னவர்களும் சரி, சொல்லாதவர்களும் சரி இன்று உங்கள் இணையரிடம் நீங்கள் கொண்ட காதலை மிக அழகாக வெளிப்படுத்தலாம். 

பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்: உங்கள் உறவில் ஒரு இனிமையை ஏற்படுத்தும் வகையில், இணையருக்கு சாக்லேட்டை பரிசளிக்கும் தினம் இது. இப்போதுதான் இதய வடிவில் சாக்லேட் பாக்ஸ் முதல் இதய வடிவ சாக்லேட்டுகளும் விற்பனைக்கு வருகின்றனவே.

பிப்ரவரி 10 -  டெட்டி டே : பெண்களுக்குப் பிடித்த பொம்மையாக கரடி பொம்மைகள் (டெட்டி பியர்) விளங்குகின்றன. அவற்றை பரிசளித்து மகிழலாம்.

பிப்ரவரி 11 - வாக்குறுதி தினம் : இருவரும் காதலில் இணைந்து இணை பிரியாமல் வாழ்வோம் என்று வாக்குறுதி அளிக்கும் தினமாக இது அமைந்துள்ளது.

பிப்ரவரி 12 - முத்த தினம் : காதலின் அழகிய உணர்வை மிக மென்மையாக வெளிப்படுத்தும் வகையில் இந்த தினத்தை காதலர்கள் முத்தமிட்டு வெளிப்படுத்துகிறார்கள். 

பிப்ரவரி 13 - அணைத்தல் தினம் : தங்களுக்குள் இருக்கும் எந்த வலியையும் எந்தக் கவலையையும் மறக்கச் செய்யும் ஆற்றல் அணைத்தலுக்கு உள்ளது. அதைத்தானே வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலும் கட்டிப்பிடி வைத்தியம் என்று சொல்லியிருக்கிறார்.  அதைக் கொண்டாடும் தினம் தான் இது.

பிப்ரவரி 14 - காதலர் தினம் : இன்றைய தினம் எல்லாவற்றுக்கும் மேலான காதலர் தினம். இதைத்தான் இன்று உலகமே மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது. காதலிப்பவர்கள் மட்டுமல்ல, தம்பதியரும் கூட தற்போது காதலர் தினத்தை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள்.

ஆதலால் காதல் செய்வோம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com