இளமைக் காலத்தில் அதிகம் கஷ்டப்பட்டவர்களா நீங்கள்?

குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைக் காலத்தில் அதிகம் கஷ்டப்பட்டவர்களா நீங்கள்? அப்படியெனில் எதிர்காலத்தில் அதிக பாராட்டுகளைப் பெறும் நபராக நீங்கள் இருப்பீர்கள்....
இளமைக் காலத்தில் அதிகம் கஷ்டப்பட்டவர்களா நீங்கள்?
Published on
Updated on
1 min read

குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைக் காலத்தில் அதிகம் கஷ்டப்பட்டவர்களா நீங்கள்? அப்படியெனில் எதிர்காலத்தில் அதிக பாராட்டுகளைப் பெறும் நபராக நீங்கள் இருப்பீர்கள்....

இளம் வயதில் கஷ்டப்பட்டால் வயதான காலத்தில் செழிப்பாக இருக்கலாம் என்று பொதுவாக சொல்லக்கேட்டிருப்போம். அதாவது, குழந்தைப் பருவத்தில் சரியாக கல்வியைத் தொடங்கி, இளம் வயதில் நன்றாகப் படித்து பட்டம் பெற்று நல்ல வேலையில் சேர்வது, இளமைப் பருவத்தில் நன்றாக உழைப்பது எதிர்கால வாழ்வை சிறப்பாக்கும். 

ஏன், தற்போதைய சாதனையாளர்கள் பலரும் இளமையில் கஷ்டப்பட்டதால்தான் சாதனை படைக்க முடிந்தது என்று கூறுகிறார்கள். கல்வி, விளையாட்டு , வணிகம் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் வறுமையை உணர்ந்தவர்களே. 

தாங்கள் நினைத்தது நடக்கமுடியாத சூழ்நிலையில் தடைகளை உடைத்தெறிந்து தங்களுக்கான பாதையை வகுத்துக்கொண்டவர்கள். எனவே, இளம்வயதில் கஷ்டத்தை அதிகம் உணர்வதாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கான சிறப்பான எதிர்க்கலாம் காத்துக்கொண்டிருக்கிறது. 

அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகமும் இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் சில சுவாரசியமான முடிவுகள் தெரியவந்துள்ளன. 

இளம் வயதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பிற்காலத்தில் நல்ல குணங்களைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் 'ஜர்னல் ஆப் எக்ஸ்பெரிமென்டல் சோசியல் சைக்காலஜி' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

ஆய்வாளர் பிலிப் ராபின்ஸ் இதுகுறித்து, 'இந்த கண்டுபிடிப்புகள் உளவியல் மற்றும் தத்துவம் ஆகிய இரண்டிலும் காணப்படும் அறிவு இடைவெளியைக் குறைக்க உதவும். இந்த இரண்டுமே மனித நடத்தைகளை பற்றி அறிய உதவும். புறக்கணிப்படுதலினால் மனிதனில் ஏற்படும் உளவியல் பற்றிய சிறந்த புரிதலை வழங்குகிறது' என்றார். 

மேலும் சிறுவயதில் பெரிய தவறு இழைத்து அதற்கு சிறிய தண்டனை மட்டும் பெற்றவர்களும் சிலர் குற்ற உணர்ச்சி காரணமாக பிற்காலத்தில் அவர்களின் நடத்தையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

வாழ்க்கையில் அனுபவித்தவற்றை சொல்லும்போது என்பதை மற்றவர்களிடம் நன்மதிப்பையும் அனுதாபத்தையும் பெறுவதுடன் மற்றவர்களிடம் நம்பிக்கையும் ஏற்படுகிறது. 

மேலும் இளம்வயதில் துன்பத்தை அதிகம் அனுபவித்தவர்கள் எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு உதவும் குணத்தை அதிகம் பெறுகிறார்கள், இவர்கள் எதிர்காலத்தில் சாதனை புரிந்து அதிகம் பாராட்டுகளைப் பெறுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com