மார்க்கெட்டில் புதுசு! 25 மணிநேர பேட்டரி திறன் கொண்ட லெனோவா யோகா C630 WOS சீரிஸ் லேப்டாப் வெளியீடு!

லெனோவா யோகா சீரிஸ் லேப்டாப்கள் நவம்பர் முதல் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது, இந்தியாவில் எப்போது அறிமுகம் என்பதற்கான அறிவிப்பு இல்லை.
மார்க்கெட்டில் புதுசு! 25 மணிநேர பேட்டரி திறன் கொண்ட லெனோவா யோகா C630 WOS சீரிஸ் லேப்டாப் வெளியீடு!
Published on
Updated on
1 min read

தொடர்ந்து 25 மணி நேர பேட்டரி தாங்கு திறன் கொண்ட லேப்டாப்களை அறிமுகப்படுத்துவதில் சர்வதேச அளவில் லெனோவா முதன்மையான நிறுவனமாக விளங்குகிறது. அது தற்போது வெளியிட்டுள்ள லெனோவா C630 WOS  சீரிஸ் லேப் டாப்கள் Windows 10 மற்றும் ஏனைய Winodows சாஃப்ட்வேர்களில் இயக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இவ்வகை லேப் டாப்களின் முதல் நன்மை அதன் 25 மணி நேர நீடித்த பேட்டரி ஆயுள். அதைத் தாண்டி லேப் டாப் ஸ்டேண்ட்பை நிலையில் இருக்கையில் மீண்டும் அவற்றை உயிர்ப்பிக்க பிற லேப்டாப்களில் சிறிது நேரம் தேவைப்படும். ஆனால் இவ்வகை லேப் டாப்களில் அந்தப் பிரச்னை தவிர்க்கப் பட்டிருக்கிறது. ஸ்டேண்ட்பை நிலைக்குச் சென்ற லேப்டாப்பை உடனடியாக உயிர்பிக்க முடியும். அது மட்டுமல்ல பிற லேப் டாப்களை விட இவற்றின் Wi-Fi இணைப்புத் திறனும் இடையில் தடங்கலின்றி நிலையானதாக நீடிக்கும்படியாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இவை தவிர, இவ்வகை லேப் டாப்களைப் பயன்படுத்தும் போது பயனர்களின் மூடுக்கு ஏற்ற வகையில் முந்தைய காலங்களை விட அவர்களது ஆன்லைன் இருப்பு நேரம் எத்தனை தூரம் அதிகரித்திருக்கிறது?! பேட்டரி ஆயுள் குறையும் போது ஆட்டோமேடிக்காக லேப் டாப் திரையின் வெளிச்சமும் குறைகையில் பயனர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களையும் பதிவு செய்யும் விதமாக இந்த வகை யோகா சீரிஸ் லேப்டாப்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

இவ்வகை லேப்டாப்களின் எடை 1.2 kg. மொத்த லேப்டாப்பின் அளவு 12.5 மிமீ மெல்லியது. லேப் டாப் ஸ்க்ரீன் 13.3 இஞ்ச் முழு HD தொடுதிரை கொண்டது. அதுமட்டுமல்ல பயனாளர்களுக்கென லெனோவா பென் மற்றும் Windows Ink அம்சங்களைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, 
இரண்டு USB TYPE - C ports, ப்ளூடூத், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், GPS வசதிகளும் உண்டு. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் வசதிக்கு ஏற்ப 4GB மற்றும் 8GB RAM  வசதி மற்றும் 128GB அல்லது 256GB UFS 2.1 ஸ்டோரேஜ் வசதியும் இதில் உண்டு.

பயன்படுத்த மிக எளிதானதாக மட்டுமல்லாமல் பயனாளர்களுக்கு ஏராளமான சலுகை வசதிகளையும் அள்ளித்தரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லெனோவா யோகா சீரிஸ் லேப்டாப்கள் நவம்பர் முதல் ஐரோப்பா மற்றும் சில நாடுகளில் அனைத்து வகையான சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என அறிவித்திருக்கிறார்கள். இந்திய பணமதிப்பில் இதன் விலை 80,000 ரூபாய். இந்தியாவில் இவ்வகை லேப்டாப்கள் எப்போது வெளியிடப்படவிருக்கின்றன என்பது குறித்து லெனோவா நிறுவனம் இன்னும் அறிவிக்கவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com