விமானங்களில் ஆப்பிள் மடிக்கணினிகளை எடுத்துச் செல்ல வேண்டாம்: டிஜிசிஏ அறிவுறுத்தல் 

ஆப்பிள் மேக்புரோ ரக மடிக்கணினிகளில் பேட்டரி வெப்பமடையும் பிரச்னை இருப்பதால், விமானங்களில் மக்கள் அந்த மடிக்கணினிகளை கொண்டு செல்ல வேண்டாம் என்று உள்நாட்டு விமானப்போக்குவரத்து
விமானங்களில் ஆப்பிள் மடிக்கணினிகளை எடுத்துச் செல்ல வேண்டாம்: டிஜிசிஏ அறிவுறுத்தல் 


ஆப்பிள் மேக்புரோ ரக மடிக்கணினிகளில் பேட்டரி வெப்பமடையும் பிரச்னை இருப்பதால், விமானங்களில் மக்கள் அந்த மடிக்கணினிகளை கொண்டு செல்ல வேண்டாம் என்று உள்நாட்டு விமானப்போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, மேக்புரோ ரக மடிக்கணினிகளில் பிரச்னை இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. அதில், ஆப்பிள் மேக்புரோ 15 இன்ச் மடிக்கணினிகள் சிலவற்றில் பேட்டரி வெப்பமடையும் பிரச்னை உள்ளது. அதனால், மடிக்கணினி வெடித்து தீப்பிடிக்கவும் வாய்ப்புள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை விற்பனையான மேக்புரோ மடிக்கணினிகள் சிலவற்றில் இந்த பிரச்னை உள்ளது. அந்த மடிக்கணினியை வைத்திருப்பவர்கள் கட்டணமின்றி புதிய பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக டிஜிசிஏ தலைவர் அருண் குமார் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில்,  ஆப்பிள் மேக்புரோ மடிக்கணினிகள் சிலவற்றில் பேட்டரி வெப்பமடையும் பிரச்னையுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், அந்த ரக மடிக்கணினிகளை விமானத்தில் கொண்டு செல்வதை பயணிகள் தவிர்க்க வேண்டும்.  புதிய பேட்டரிகள் மாற்றும் வரை, கைப்பையிலோ, அல்லது உடைமைகள் பையிலோ அந்த மடிக்கணினியை பயணிகள் கொண்டு வரக்கூடாது. மேக்புரோ மடிக்கணினிகளை எடுத்துச் செல்ல வேண்டுமென்றால், பேட்டரி நன்றாக உள்ளதற்கான சான்றும், புதிய பேட்டரி மாற்றப்பட்டிருந்தால் அதற்கான சான்றும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com