அலர்ட்... ஸ்டபிலைஸர் தேவையில்லாத இன்வெர்ட்டர் ஏ சி பயன்படுத்துவோர் கவனத்துக்கு!

விற்பனைப் பிரதிநிதி ஸ்டெபிலைஸர் தேவையில்லை என்று கூறும் போது நாம் மறக்காமல் அவரிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி; எத்தனை வோல்டேஜ் ஸ்பெஃபிகேஷன் வரை இந்த ஏ சி ஓடும்? என்ற கேள்வியைக் கேட்டு அதற்கான
அலர்ட்... ஸ்டபிலைஸர் தேவையில்லாத இன்வெர்ட்டர் ஏ சி பயன்படுத்துவோர் கவனத்துக்கு!

ஏ சி வாங்க ஷோரூமுக்குச் செல்கிறீர்கள், அங்கே இன்வெர்டர் ஏ சி தான் வாங்குவது என்று தீர்மானித்து விட்டீர்கள். அப்போது அங்கிருக்கும் விற்பனைப் பிரதிநிதி சொல்வார். இன்வெர்டர் ஏ சி வாங்கினால் அதற்கு ஸ்டபிலைஸர் தேவையில்லை. ஏனெனில், இன்வெர்டெர் ஏ சி களில் ஸ்டெபிலைஸர்கள் இன்பில்டாக இருக்கும் என. அதை நம்பி அனேகம் பேர் புதிதாக ஏ சி வாங்குகையில் இப்போதெல்லாம் ஸ்டெபிலைஸர்களைத் தவிர்த்து விடுகிறார்கள். பிரச்னை வராதவரை இதனால் பாதிப்பு ஒன்றும் இல்லை. ஆனால், உங்கள் பகுதியில் மின்சாரம் தடையற்ற மின்சாரம் கிடைப்பதில் ஏற்ற இறக்கம் இருந்தால் உடனடியாகப் பாதிக்கப்படுவது ஸ்டெபிலைஸர் இணைக்கப்படாத ஏசி கள் தான். எனவே. அதை மனதில் வைத்துக் கொண்டு, விற்பனைப் பிரதிநிதி ஸ்டெபிலைஸர் தேவையில்லை என்று கூறும் போது நாம் மறக்காமல் அவரிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி;

எத்தனை வோல்டேஜ் ஸ்பெஃபிகேஷன் வரை இந்த ஏ சி ஓடும்? என்ற கேள்வியைக் கேட்டு அதற்கான விடையைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், அனைத்து விதமான, பிரபல பிராண்டு ஏசி களிலுமே அதன் வாரண்டி கார்டுகளில் தெளிவாக அவர்கள் கூறியிருப்பது, ஹை வோல்டேஜ் மற்றும் லோ வோல்டேஜ் பிரச்னைகளால் ஏ சி மெஷினில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது என்பதே’ இப்படிச் சொல்லி விட்டு அவர்கள் தங்கள் ஏ சி களுக்கு ஸ்டெபிலைஸர் தேவையில்லை என்றும் விளம்பரம் செய்தார்கள் என்றால் அது வெறுமே மார்க்கெட்டிங் ஸ்ட்ரேட்டஜி  என்பதை பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே, விற்பனைப் பிரதிநிதிகளை நம்பி ஸ்டெபிலைஸர்களைத் தவிர்ப்பதை விட்டு உங்கள் ஏரியாவில் ஏற்ற இறக்கமற்ற தடையற்ற மின்சாரம் கிடைத்தாலும் கூட நீங்கள் ஒரு பேசிக் மாடல் ஸ்டெபிலைஸரை உங்கள் ஏ சி க்குப் பொருத்திக் கொள்வதே உகந்தது.

ஏனெனில், ஏ சி வாரண்டி கார்டுகளில் மின்சார ஏற்ற இறக்கத்தினால் நேரக்கூடிய சேதாரங்களைப் பொருத்தவரை 205 முதல் 250 வோல்ட் மின்சாரம் வரையிலான பாதிப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பேற்போம் அதைத்தாண்டிய பாதிப்புகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Content Courtesy: EcDial you tube channel!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com