வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி!

வாட்ஸ்ஆப்பில் ஒரு குழுவின் அல்லது தனிப்பட்ட நபரின் உரையாடலின் அறிவிப்பை நிரந்தரமாக நிறுத்தி வைக்கும்(ம்யூட்) வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்பில் ஒரு குழுவின் அல்லது தனிப்பட்ட நபரின் உரையாடலின் அறிவிப்பை நிரந்தரமாக நிறுத்தி வைக்கும்(ம்யூட்) வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிற்கேற்ப அவ்வப்போது புதிய வசதிகளை வழங்கி வருகிறது. 

அந்தவகையில் வாட்ஸ்ஆப்பில் ஒருவர் மெசேஜ் அனுப்பும்போது நமக்கு ஒலி எச்சரிக்கையடன், திரையின் வெளியே 'பாப் அப்' காட்டும். குறிப்பாக ஒரு குழுவில் அனைவரும் சாட் செய்யும்போது தொடர்ந்து 'நோட்டிபிகேஷன்' வந்த வண்ணம் இருக்கும். அல்லது தனிப்பட்ட ஒருவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பும் பட்சத்தில், அந்த தனிப்பட்ட சாட்-யை மட்டும் நோட்டிபிகேஷன் வராமல் நிறுத்தி வைக்கும் வசதி ஏற்கனவே வாட்ஸ்ஆப்பில் உள்ளது. 

ஆனால், இதற்கான ஆப்ஷன்களில் 8 மணி நேரம், ஒரு வாரம் என அதிகபட்சமாக ஓராண்டு வரையில் நிறுத்தி வைக்க முடியும் என்றிருந்தது. இந்நிலையில், நிரந்தரமாக நிறுத்தி வைக்கும்(ம்யூட்) வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் ஆப்ஷனில் 'ஆல்வேய்ஸ்'(always) என்பதை தேர்வு செய்ய வேண்டும். 

பீட்டா வெர்ஷனில் செய்யப்பட்ட சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எந்த நபரை/குழுவை ம்யூட் செய்ய வேண்டுமோ அதன் சாட்-இன் வலதுபக்க ஓரத்தில் உள்ள 'ம்யூட் நோட்டிபிகேஷன்' (mute notification) ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்துகொள்ளுங்கள். 

இந்த ஆப்ஷன் வரவில்லை எனில், பிளே ஸ்டோருக்குச் சென்று வாட்ஸ்ஆப்-ஐ அப்டேட் செய்யுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com