புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் டிவிட்டர்!

சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் செயலி புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த இருக்கிறது.
புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் டிவிட்டர்!
புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் டிவிட்டர்!

சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் செயலி புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன்படி ஐஓஎஸ் பயனாளர்கள் இனி தங்களுடைய டிவிட்டர் செயலியை சொடக்கினால் முகப்பு சுட்டுரைகள் மற்றும்  முதன்மை(டாப்) சுட்டுரைகளும் ஒரே பக்கத்தில் தெரிய இருக்கிறது.

தற்போது பயனாளர்கள் முகப்பு பக்கத்திற்கோ அல்லது சமீபத்திய சுட்டுரைகளைக் காண வேண்டும் என்றால் மூன்று ஸ்டார் ஐகானைத் உபயோகிக்க வேண்டும் .ஆனால் வர இருக்கிற அம்சத்தில் அதற்கான தேவை இருக்காது. 

இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் , ‘ முதலில் முகப்பு சுட்டுரைகளையா அல்லது முதன்மை சுட்டுரைகளை காண விருப்பமா? இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்கும் படி வசதி செய்யப்பட்டுள்ளது.இது ஐஓஎஸ் பயனாளர்களுக்கு என்பதால் அதற்கான பரிசோதனை நடந்து வருகிறது. அதில் விருப்பமானவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து பார்த்துக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் இது அனைத்து விதமான பயனர்களுக்குமானதாக விரிவுபடுத்தப்படுமா என்பதிலும் சரியான தெளிவு இல்லை.

இதற்கிடையில், டிவிட்டர் ஏற்கனவே ஒரு புதிய அம்சமான "சாஃப்ட் பிளாக்"யை உருவாக்கத் தொடங்கியுள்ளது, இது வலைதளத்தில் உள்ள எந்தவொரு பயனரும் அவர்களை பின்தொடர்வதைத் தடுக்காமல் அவர்களைப் பின்தொடர அனுமதிக்கிறது.

அதாவது பின்தொடர்பவரை மென்மையாகத் தடுக்க, உங்கள் சுயவிவரத்திற்குச் சென்று ’பின்தொடர்பவரை அகற்று’ என்ற விருப்பத்தைக் தேர்வு செய்தால் நீங்கள் அகற்ற விரும்பும் நபருக்கு மாற்றம் குறித்து எதுவும் அறிவிக்கப்படாது.

இது ஒருவரைத் தடுப்பதை விட அவர் உங்கள் டிவிட்டுகளைப் பார்ப்பதிலிருந்தும், உங்களுக்கு நேரடியாகச் செய்தி அனுப்புவதிலிருந்தும் தடுக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com