கோவையில் மத்தியதர வர்க்க இல்லத்தரசிகளை குஷிப்படுத்தி வரும் ரூ 2,500 மலிவு விலை வாஷிங் மெஷின்!

விலை குறைவு என்றாலும் மற்ற நிறுவனங்களின் வாஷிங் மெஷின்களோடு ஒப்பிடுகையில் தங்களது வாஷிங்மெஷின் தரத்திலும், வசதிகளிலும் குறைந்ததல்ல என்று உறுதி படக் கூறுகிறார் முருகேசன்.
கோவையில் மத்தியதர வர்க்க இல்லத்தரசிகளை குஷிப்படுத்தி வரும் ரூ 2,500 மலிவு விலை வாஷிங் மெஷின்!

தொழில்நகரமான கோவையில் தனியார் நிறுவனமொன்று குறைந்த விலையில் வாஷிங் மெஷனைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. அந்த வாஷிங் மெஷினின் விலை என்ன? குறைந்த விலையில் வாஷிங்மெஷின் எப்படி சாத்தியம் என்று தெரிந்து கொள்வோமா?

கோவையில் டேபிள் டாப் வெட் கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவர் ரத்னபுரியைச் சேர்ந்த முருகேசன். வெட் கிரைண்டர் விற்பனையில் தொய்வு ஏற்பட்டதால் வேறு ஏதாவது ஒரு புதிய விஷயத்தை முயற்சித்துப் பார்க்க கலை இறங்கினார். ஒன்றரை ஆண்டுகள் பெரு முயற்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய வாஷிங் மெஷினைத் தயாரித்திருக்கிறார் முருகேசன். அதைப் பற்றிப் பேசுகையில் முருகேசன் தெரிவித்தது என்னவென்றால்...

நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக டேபிள் டாப் மற்றும் கிச்சன் டாப் வெட் கிரைண்டர்களைத் தயாரித்து வருகிறோம். தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் மக்களிடம் ஓட்டு வாங்கும் முயற்சியில் இலவச வெட் கிரண்டர்கள் வழங்கத் தொடங்கியதில் எங்களுடைய தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அம்மாதிரியான சூழலில் அதே விலையில் வேறொரு புதிய பொருளை மக்களுக்குத் தரும் முயற்சியில் இறங்கினோம். அப்போது தான் இந்த மாதிரியான ஒரு ஐடியா தோன்றியது. அதற்காக கொஞ்சம் அதிகம் செலவு செய்து பொருட்களைத் தயாரித்து நாங்கள் விரும்பும் விலைக்குள் அதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.

விலை குறைவு என்றாலும் மற்ற நிறுவனங்களின் வாஷிங் மெஷின்களோடு ஒப்பிடுகையில் தங்களது வாஷிங்மெஷின் தரத்திலும், வசதிகளிலும் குறைந்ததல்ல என்று உறுதி படக் கூறுகிறார் முருகேசன். பெரிய நிறுவனங்களின் வாஷிங் மெஷின்களில் கூட 4 அல்லது 5 சட்டைகளைத் துவைக்கும் போது அது துவைத்து முடித்து காய்ந்து டிரையரில் இருந்து வெளிவர குறைந்த பட்சம் 50 நிமிடங்கள் ஆகின்றது என்று கூறுகிறார்கள். ஆனால், எங்களது வாஷிங்மெஷினில் 7 நிமிடங்களுக்கு மேல் துவைக்கும் நேரம் தேவைப்படுவதில்லை. அந்த அளவுக்கு நாங்கள் இதில் வசதிகளை கட்டமைத்துள்ளோம் என்கிறார் முருகேசன்.

வாஷிங் மெஷின் விலை 2500 ரூபாய் ஜி எஸ் டி வரியுடன் சேர்த்து இதன் விலை 2950 ரூபாய். குறைந்த விலை வாஷிங்மெஷினுக்கு கோவைப் பகுதியின் நடுத்தர வர்க்க மக்களிடையே இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் அதிக விலை கொடுத்து பெரிய நிறுவனங்களின் வாஷிங்மெஷின்களை வாங்கிப் பயன்படுத்த விலை கட்டுப்படியாவதில்லை. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பது தங்களது அதிர்ஷ்டம் என அவர்கள் கருதுகிறார்கள். வாஷிங் மெஷின் விலை ரூ 2500 என்ற அறிவிப்பைப் பார்த்து சும்மா வேடிக்கை பார்க்க கடைக்குள் நுழைபவர்கள் கூட வாஷிங் மெஷினின் செயல்திறனையும், வடிவமைப்பையும் கண்டு உடனடியாக அதை வாங்க விருப்பம் கொள்கின்றனர் என்கிறார் முருகேசன். தங்களது தயாரிப்பான இந்த வாஷிங் மெஷின்களுக்கு ஓராண்டு வாரண்டியும் அளித்திருக்கிறார் முருகேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com