உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?
By DIN | Published On : 27th October 2021 05:51 PM | Last Updated : 27th October 2021 05:51 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
பூஞ்சை வகையைச் சேர்ந்த காளானை ஆண்டாண்டு காலமாக உணவில் சேர்த்து வருகிறோம். அனைத்து வகையான காளான்களும் உண்ணக்கூடிய காளான் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. காளான்களின் விஷக் காளான்களும் இருக்கின்றன. எனவே, காளான் வாங்கும்போது கவனம் தேவை.
♦காளான்கள் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
♦ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் அடைப்பை சரி செய்கிறது. இதனால், உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகளைத் தடுக்கிறது.
♦மூட்டு வலி, வாதம், மலட்டுத் தன்மை ஆகியவற்றுக்கு சிறந்த வலி நிவாரணியாகும்.
♦ பெண்களுக்கு கருப்பை நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
♦ காளான் சேர்த்துக்கொள்வதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
♦ மலச்சிக்கலைத் தவிர்க்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
♦ நரம்புகளுக்கு வலு சேர்க்கிறது.
♦பொட்டாசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் டி காளானில் அதிகம் காணப்படுகிறது.
♦ உடல் எடையைக் குறைப்பதில் காளானுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. லேசான உடற்பயிற்சியுடன் தினமும் காளான் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
♦ உடலில் கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. குறைந்த கலோரி உணவுகளில் காளானுக்கு முக்கிய இடமுண்டு.
இதையும் படிக்க | மார்பகப் புற்றுநோயாளிகள் நட்ஸ் சாப்பிடுவதால்...