திருச்சியின் கொப்பாவளி ஊராட்சியில் மகளிர் ஆட்சி!

மதுரையில் மீனாட்சி, காஞ்சியில் காமாட்சி, காசியில் விசாலாட்சி வரிசையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் மகளிர் ஆட்சி அமைந்துள்ளது.
திருச்சியின் கொப்பாவளி ஊராட்சியில் மகளிர் ஆட்சி!

மதுரையில் மீனாட்சி, காஞ்சியில் காமாட்சி, காசியில் விசாலாட்சி வரிசையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் மகளிர் ஆட்சி அமைந்துள்ளது.

ஊராட்சித் தலைவர், 6 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள கொப்பாவளி ஊராட்சி.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 404 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 404 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 3,408 வார்டு உறுப்பினர்களுக்கு டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ஆம் தேதி என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

அனைத்து இடங்களுக்கும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு, வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடந்த 19ஆம் தேதி இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொப்பாவளி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மற்றும் 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்களை எதிர்த்து யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து அந்த 7 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கொப்பாவளி கிராம ஊராட்சித் தலைவராக, மதிமுக பிரமுகரான ப. செல்வராணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இந்த ஊராட்சியில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. இதில் 3 வார்டுகள் பெண்களுக்கும் 3 வார்டுகள் பொது என்று ஒதுக்கப்பட்டுள்ளது. பொது வார்டிலும் பெண்களே போட்டியிடச் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஒரு இடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  6 வார்டுகளிலும் கல்பனா, மனோகரி, காயத்ரி, ஜெயலலிதா, கவிதா, சாந்தி என பெண்களே, போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

முதல் முறையாக கிராம ஊராட்சித் தலைவராகவும், வார்டு உறுப்பினர்களாகவும் முழுக்க முழுக்க பெண்களே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 

போட்டியின்றி தேர்வாகியுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை மதிமுக மகளிரணிச் செயலர் மருத்துவர் ரொக்கையா மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.  சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றங்களில் மகளிருக்கான இடஒதுக்கீட்டுக்கு குரல் வலுத்து வரும் நிலையில் ஊராட்சியில் முழுவதும் பெண்களே ஆட்சி என்பதை அனைவரது விழிகளையும் வியப்படையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com