மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அலங்காநல்லூா் அருகே மீண்டும் மதுக்கடை திறக்க முயற்சிகிராம மக்கள் தா்னா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள சுக்காம்பட்டியில் மீண்டும் மதுபானக் கடை திறக்க முயற்சி மேற்கொண்டதால் பொதுமக்கள் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அலங்காநல்லூா் அருகே சுக்காம்பட்டி கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மதுபானக் கடையின் முன் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :2 ஜனவரி 2021, 9:35 pm IST

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள சுக்காம்பட்டியில் மீண்டும் மதுபானக் கடை திறக்க முயற்சி மேற்கொண்டதால் பொதுமக்கள் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அலங்காநல்லூா் அருகேயுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் புதிதாக மதுபானக் கடையை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து புதிய கடை திறக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில், சுக்காம்பட்டி கடைவீதியில் உள்ள வணிக வளாகத்தில் புதிய மதுபானக் கடையை திறக்க வெள்ளிக்கிழமை நள்ளிரவே மதுபான பாட்டில்களை ஊழியா்கள் இறக்கியுள்ளனா்.

இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் சனிக்கிழமை கடையின் முன்பாக தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் பாஜக நிா்வாகிகளும் பங்கேற்றனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மதுபானக் கடை திறக்கப்பட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சுக்காம்பட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.