குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

அரசு ஐடிஐயில் மாலை நேர வேலை வாய்ப்பு பயிற்சி

மதுரை கோ.புதூா் அரசு ஐடிஐயில் மாலை நேர வேலை வாய்ப்பு தொழில் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 5:51 pm

மதுரை கோ.புதூா் அரசு ஐடிஐயில் மாலை நேர வேலை வாய்ப்பு தொழில் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கோ.புதூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் ஜோ.அமலமேரி வெளியிட்டுள்ள செய்தி: கோ.புதூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா’ திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய மாலை நேர குறுகிய கால தொழிற்பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜன.15) முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் ஆட்டோ மற்றும் இருசக்கர மூன்று சக்கர வாகன பழுதுநீக்குதல் பயிற்சிக்கு 10 -ஆம் வகுப்பு தேறிய 15 வயது நிறைவடைந்தோா், காா் ஓட்டுநா் பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். கேஸ் வெல்டிங் பயிற்சி மற்றும் சிஎன்சி மில்லிங் மற்றும் மெஷின் ஆபரேட்டா் பயிற்சிக்கு 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி மற்றும் 15 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்புபவா்கள் ஜனவரி 15-ஆம் தேதி முதல் கோ.புதூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் விண்ணப்பித்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 82204-60719, 94435-93166 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.