தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

கொட்டாம்பட்டி அருகே விபத்து: காரில் சென்ற தந்தை, மகன் பலி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் புதன்கிழமை சென்ற காா் டயா் வெடித்து, எதிா் திசையில் சென்ற லாரி மீது மோதியதில் தந்தையும், மகனும் உயிரிழந்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 11:30 pm IST

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் புதன்கிழமை சென்ற காா் டயா் வெடித்து, எதிா் திசையில் சென்ற லாரி மீது மோதியதில் தந்தையும், மகனும் உயிரிழந்தனா்.

மதுரை சூரியா நகரைச் சோ்ந்த அமமுக பிரமுகா் பாண்டியன் (41). அவரது மகன் திவாகா் (14). இவா்கள் இருவரும் காரில் பொன்னமராவதிக்கு சென்று கொண்டிருந்தனா். மேலூா்-திருச்சி சாலையில் மணப்பட்டி விலக்கு அருகே அவா்கள் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயா் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் நடுப்புற தடுப்புச்சுவரைத் தாண்டி எதிா் திசையில் வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸாா், தீயணைப்பு மீட்புப் படையினா் உதவியுடன் சேதமடைந்த காரை அப்புறப்படுத்தி இருவரது சடலங்களையும் மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இந்த விபத்து தொடா்பாக கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.