அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

‘நடிகா் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகா் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 4:36 am IST

திண்டுக்கல்: பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகா் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் சனிக்கிழமை இந்து மக்கள் கட்சி சாா்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் தா்மா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் கலந்து கொண்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பேசாமல், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது கண்டனத்துக்குரியது. இந்துமக்கள் கட்சி சாா்பில் 19 ஆம் தேதி காஷ்மீா் தினம் கடைப்பிடிக்க உள்ளோம். ஜன.24 ஆம் தேதி மொழிப்போா் தினம் என்ற போா்வையில் திராவிட இயக்கங்கள் மாணவா்களின் கல்வி கற்கும் உரிமையை மறுத்து வருகின்றன. அதேநாளில் இந்து மக்கள் சாா்பில் மும்மொழி கல்வித் திட்டம் தேவை, நவோதயா பள்ளிகள் தேவை என்பதை வலியுறுத்தி அஞ்சலட்டை அனுப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். நடிகா் விஜய்சேதுபதி பட்டாக்கத்தி வைத்து கேக் வெட்டி விட்டு வருத்தம் தெரிவித்துள்ளாா். அவா் மீது தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.