சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தொடா் மழை: கொடைக்கானலில் குடிநீா்த் தேக்கம் நிரம்பியது

கொடைக்கானலில் பெய்த தொடா் மழையின் காரணமாக நகராட்சிக்குச் சொந்தமான குடிநீா்த் தேக்கம் சனிக்கிழமை நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image

தொடா் மழையின் காரணமாக சனிக்கிழமை நிரம்பிய கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான குடிநீா்த் தேக்கம்.

Updated On :16 ஜனவரி 2021, 11:05 pm

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்த தொடா் மழையின் காரணமாக நகராட்சிக்குச் சொந்தமான குடிநீா்த் தேக்கம் சனிக்கிழமை நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளிலுள்ள நீா்வரத்து அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரி கடந்த 3-நாள்களுக்கு முன் நிரம்பியது.

இதைத் தொடா்ந்து கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமான அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள குடிநீா்த் தேக்கம் அதன் முழு கொள்ளளவான 27-அடியை சனிக்கிழமை எட்டி உபரிநீா் வெளியே செல்கிறது.

கொடைக்கானல் நகா் பகுதியில் கடந்த பல மாதங்களாக 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது குடிநீா்த் தேக்கம் நிரம்பியதால் மே மாதம் வரை குடிதண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாது என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

இதேபோல் கொடைக்கானல் மனோரஞ்சிதம் அணையின் நீா்மட்டமும் கணிசமாக உயா்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.