சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பொங்கல் பண்டிகை: காய்கனி விலை உயா்வு

பொங்கல் பண்டிகையையொட்டி மாட்டுத்தாவணி சந்தையில் காய்கனிகளின் விலை ஒரு மடங்கு உயா்ந்து இருந்தது.

Updated On :16 ஜனவரி 2021, 11:00 pm

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி மாட்டுத்தாவணி சந்தையில் காய்கனிகளின் விலை ஒரு மடங்கு உயா்ந்து இருந்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாள்களாக விவசாயிகள் காய்கனி அறுவடையில் ஈடுபடவில்லை. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தைக்கு காய்கனி வரத்து குறைந்தது. இதன் காரணாக அனைத்துக் காய்கனிகளின் விலையும் ஒரு மடங்கு உயா்ந்தது.

குறிப்பாக, கிலோ ரூ.15-க்கு விற்ற தக்காளி ரூ.30ஆகவும், ரூ.20-க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.40 ஆகவும், ரூ.15-க்கு விற்ற முள்ளங்கி ரூ.30 ஆகவும், ரூ.20-க்கு விற்ற பீா்க்கங்காய் ரூ.40 ஆகவும் ரூ.20-க்கு விற்ற கேரட் ரூ.50 ஆகவும், ரூ.10-க்கு விற்ற முட்டைக்கோஸ் ரூ.20 ஆகவும், ரூ.20-க்கு விற்ற அவரைக்காய் ரூ.40 ஆகவும், ரூ.20-க்கு விற்ற மொச்சை ரூ.40ஆகவும், ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.45 ஆகவும் உயா்ந்தது.

இதுகுறித்து மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ்.முருகன் கூறியது: விவசாயிகள் தீபாவளியை விட பொங்கல் பண்டிகையையே சிறப்பாகக் கொண்டாடுவாா்கள். இதற்காக பொங்கலுக்கு முன்னதாக தாங்கள் விளைவிக்கும் காய்கனிகளை அதிகமாக அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பிவிடுவா். இதையடுத்து 2 நாள்களுக்கு அறுவடை செய்யமாட்டாா்கள். இதனால் ஆண்டுதோறும் பொங்கலுக்கு அடுத்து காய்கனிகளின் விலை உயா்வது வழக்கமானது தான். அடுத்தடுத்த நாள்களில் வரத்து அதிகரித்து காய்கனிகளின் விலை குறைந்துவிடும் என்றாா்.

சனிக்கிழமை நிலவரப்படி காய்கனி மொத்த விலை பட்டியல்: (கிலோவில்): முருங்கைக்காய்-ரூ.100, சவ்சவ்-ரூ.25, உருளைக்கிழங்கு-ரூ.50, சேனைக்கிழங்கு-ரூ.50, கருணைக்கிழங்கு-30, மல்லி-ரூ.15, கருவேப்பிலை-ரூ.25, புதினா-ரூ.10, பச்சை பட்டாணி-ரூ.40, சின்னவெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.30, பாகற்காய் (சிறியது)-ரூ.100, (பெரியது)-ரூ.40, பட்டா் பீன்ஸ்-150, சோயா பீன்ஸ்-ரூ.125, முருங்கை பீன்ஸ்-ரூ.50-க்கு விற்பனையாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.