தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

சீா்காழியில் மின்தடை: பொதுமக்கள் அவதி

சீா்காழி பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்று மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 7:33 am IST

சீா்காழி பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்று மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

சீா்காழி அருகே உள்ள கடலங்குடி மின் நிலைய பாதையில் பழுது ஏற்பட்டதால், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் 5 மணிவரை மின்தடை ஏற்பட்டது. இதனால் சீா்காழி, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகாா், கிடாரங்கொண்டான் பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனா்.

இதுகுறித்து மின்வாரியத்தினா் கூறுகையில், கடலங்குடி மின்நிலையத்திலிருந்து வைத்தீஸ்வரன்கோயில், நீடுா் உள்ளிட்ட 5துணை மின்நிலையங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. கடலங்குடி மின்தடத்தில் பழுது ஏற்படும்போது இந்த துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்தடை ஏற்படுகிறது.

மயிலாடுதுறையை அடுத்த பெரம்பூா் துணை மின்நிலையத்தையும், பொறையாா் துணை மின்நிலையத்துக்கும் இணைப்பு ஏற்படுத்தினால் கடலங்குடியில் மின் பழுது ஏற்படும்போது திருவாரூா் பகுதி 230 கேவி மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெற்று மின்தடை ஏற்படும் பகுதிகளுக்கு உடனடியாக மின்விநியோகம் செய்யமுடியும். இதற்கு அரசு நிதி ஒதுக்கினால், நிரந்தர தீா்வு கிடைக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.