பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவுஅமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் தனிச் செயலர் செந்தில் குமார் சந்திப்புதமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ப்ளே ஆஃப் செல்லுமா சிஎஸ்கே? என்ன செய்ய வேண்டும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளதா? என்பது குறித்து...

News image

சிஎஸ்கே வீரர்கள் - படம் - எக்ஸ் (சிஎஸ்கே)

Updated On :59 நிமிடங்கள் முன்பு

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்ல மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றிபெற வேண்டும்.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மொத்தம் பத்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், ஏற்கெனவே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது.

இந்த இரண்டு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடி தலா 6 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளதால், மீதமுள்ள லீக் போட்டிகளில் வென்றாலும் ப்ளே ஆஃப்-க்கான இடங்களை பிடிக்க முடியாது.

இதனிடையே நேற்று (மே 16) நடந்த போட்டியில், சென்னை அணியும் லக்னௌ அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து களமிறங்கிய எல்எஸ்ஜி அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்த தோல்வியின் காரணமாக, இதுவரை 12 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 6 போட்டிகளில் வெற்றியடைந்து 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லுமா? என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கான வாய்ப்பைப் பார்க்கும் போது, பொதுவாக ஒரு அணி ப்ளே ஆஃப் செல்ல 16 புள்ளிகள் தேவை. எனவே, இன்னும் சிஎஸ்கே அணி மீதமுள்ள 2 போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெற வேண்டியிருக்கிறது.

அப்படி வெற்றி பெற்றாலும், விளையாடவுள்ள மற்ற அணிகளில் குறிப்பாக பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் போன்ற அணிகளின் வெற்றி, தோல்வி, ரன்ரேட்டுகளைப் பொறுத்து வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

In the ongoing IPL season, the Chennai Super Kings must win their remaining two matches to qualify for the playoffs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.