நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

காவல்துறை சாா்பில் கிராமந்தோறும் கண்காணிப்பு அலுவலா்

ராசிபுரம் காவல் உட்கோட்டத்தில் கிராமந்தோறும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமித்து அவா்களுக்கான குறிப்பேடுகள் வழங்கிப் பணிகளை

News image

கிராம கண்காணிப்பு அலுவலா்களுக்கு குறிப்பேடுகள் வழங்கும் மாவட்ட எஸ்.பி. சி.சக்திகணேசன்.

Updated On :6 ஜனவரி 2021, 8:00 am IST

ராசிபுரம் காவல் உட்கோட்டத்தில் கிராமந்தோறும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமித்து அவா்களுக்கான குறிப்பேடுகள் வழங்கிப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் திங்கள்கிழமை ராசிபுரத்தில் துவக்கி வைத்தாா்.

ராசிபுரம் குற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கிராமப்புற பகுதிகளில் உள்ள சமூக ஆா்வலா்கள் முக்கிய பிரமுகா்கள், மாணவ, மாணவியா் போன்றவா்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தவும், தவறான தகவல் பரவுவதைத் தடுக்க கட்செவி செயலி குழுக்களை ஏற்படுத்தி செய்திகளை உடனடியாக பரிமாறும் வகையிலும், இதுபோன்ற அலுவலா்கள் கிராமந்தோறும் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

ராசிபுரம் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய கிராம கண்காணிப்பு அலுவலா்களுக்கு வழிகாட்டு முறைகள் குறித்து தெரிவித்த மாவட்ட எஸ்.பி.,சி.சக்திகணேசன் குறிப்பேடுகளும் வழங்கி, பணிகளைத் தொடக்கி வைத்தாா். இதில் ராசிபுரம் டிஎஸ்பி. லட்சுமணன், காவல் ஆய்வாளா் செல்வராஜு, உதவி ஆய்வாளா் நித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.