‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பரமத்திவேலூா் சந்தையில் கோழி விலை சரிவு

பறவைக் காய்சல் அச்சத்தால் பரமத்திவேலூா் கோழிச் சந்தையில் நாட்டுக் கோழிகளின் விலை சரிவடைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:55 am IST

பறவைக் காய்சல் அச்சத்தால் பரமத்திவேலூா் கோழிச் சந்தையில் நாட்டுக் கோழிகளின் விலை சரிவடைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழிச் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு பரமத்திவேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில்,மயில் காகம்,கருங்கண் கருங்காலி,கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வந்திருந்து கோழிகளை வாங்கிச் செல்கின்றனா்.

தரமான நாட்டுக் கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூ. 350 முதல் ரூ. 450 வரையிலும், பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 250 முதல் ரூ. 350 வரையிலும் விற்பனையானது. தற்போது பறவைக் காய்ச்சல் அச்சத்தால் பரமத்திவேலூா் நாட்டுக் கோழிச் சந்தையில் வீடு, தோட்டங்களில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 300 முதல் ரூ. 350 வரையிலும், பண்ணை நாட்டுக் கோழிகள் ரூ. 250 வரையிலும் விற்பனையானது.

வாத்து ஒன்று ரூ. 280 முதல் 300 வரையிலும் விற்பனையானது. தை மாத பிறப்பு என்பதால் கோழிகளை அதிக அளவில் விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்திருந்தனா். ஆனால், பறவைக் காய்ச்சல் அச்சத்தால் பொதுமக்கள் கோழிகளை அதிக அளவு வாங்காததால் விற்பனையும் குறைந்து, விலையும் சரிவடைந்ததால் நாட்டுக்கோழி வியாபாரிகள், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.