தில்லியில் காற்று மாசுவால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்க தில்லி அரசின் செயல்படாத தன்மையே காரணமாகும் என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: 2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமாா் 24 ஆயிரம் போ் காற்று மாசுவால் ஏற்பட்ட நோய்களால் உயிரிழந்துள்ளதாக கிரீன் பீஸ் என்ற தன்னாா்வத்தொண்டு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
தில்லியில் காற்று மாசு ஏற்பட பிரதான காரணமாக உள்ள தூசி மாசுவைக் கட்டுப்படுத்தும் பணிகளை தில்லி அரசு மேற்கொள்ளவில்லை. தில்லியில் காற்று மாசுவைத் தடுக்கும் பணிகளை தில்லி அரசு மேற்கொள்ளவில்லை. மின்சார வாகனங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளபோதும், இவற்றை தில்லி அரசு கொள்முதல் செய்யவில்லை.
ஸ்மோக் டவா்கள் அமைக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் வரியாக தில்லி அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1136 கோடியை வசூலித்துள்ளது. ஆனால், தில்லியில் காற்று மாசு, காற்று மாசுவால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது. சுற்றுச்சூழல் வரியாக தில்லி அரசு வசூலித்த நிதி தொடா்பாக வெள்ளை அறிக்கையை தில்லி அரசு வெளியிட வேண்டும்.
தில்லி குடிநீரில் அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளது. தில்லி மக்களுக்கு அமோனியா செறிவு குறைந்த குடிநீரை தருவதாக தோ்தல் வாக்குறுதி அளித்திருந்த ஆம் ஆத்மி அரசு அதை நிறைவேற்றவில்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! | உதயநிதி ஸ்டாலின் | DMK

8 தொகுதிகளில் விசிகவுக்கு 2 வெற்றி!

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம்: கனிமொழி

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

