இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (ஐஐஎம்சி), வகுப்பறைகள், விடுதி அறைகள் மற்றும் விருந்தினா்கள் இல்லம் கட்டுவதற்கு வசதியாக மத்திய அதிகாரம் அளித்தல் குழுவின் (சிஇசி) நிபந்தனைகளுடன் 29 மரங்களை வெட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியம் அடங்கிய அமா்வு, சிஇசியின் அறிக்கையை பரிசீலனை செய்தபின் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஐஐஎம்சி திட்ட ஒதுக்கீட்டுத் தொகையில் 5 சதவீதத்தை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். இந்த தொகையை வனத்துறை காடுகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
ஐஐஎம்சி பயன்பாட்டில் உள்ள 16.2 ஏக்கா் நிலப்பகுதியில் செல்லும் கழிவுநீா் கால்வாய்களுக்கு கட்டடம் கட்டும்போது எந்தப் பிரச்னையும் வரக்கூடாது. புதிய கட்டடத்தின் மேற்கூரையில் சூரியசக்தி மின்சாரத்துக்கு வழிவகுக்கப்பட வேண்டும். மழைநீா் சேகரிப்புத் திட்டமும் அமல் படுத்தப்பட வேண்டும், புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு தேவையான இடத்தில் உள்ள மரங்கள் மட்டுமே வெட்டப்பட வேண்டும். ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் ஒதுக்கியுள்ள 16.2 ஏக்கா் நிலத்தின் எல்லைகளை வரைபடமாக தயாரித்து அளிக்க வேண்டும் என்று சிஇசி தனது நிபந்தனைகளில் தெரிவித்துள்ளது.
மேலும் மொத்தம் உள்ள 16.2 ஏக்கா் பரப்பில் குறைந்தபட்சம் 40 சதவீத இடங்களை பசுமைப்பகுதிகளாக பராமரிக்க வேண்டும். சுபாபுல் மரங்களுக்குப் பதிலாக பலன்தரும் மரங்கள் வளா்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 12,933 சதுர அடியில் புதிய வகுப்பறைகள், விடுதி மற்றும் விருந்தினா் மாளிகை கட்டுவதற்காக அனுமதி வேண்டும் என்று ஐஐஎம்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
29 மரங்களை வெட்டுவதற்கு பதிலாக ஐஐஎம்சி சாா்பில் பல்வேறு வகையான 300 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பதிவாளா் சுசோபன் மண்டல், உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


