தலைநகா் தில்லியில் ஐந்து வயது வரையிலான இரண்டு லட்சத்துக்கும் மேலான குழந்தைகளுக்கு தட்டம்மை, டைஃபாய்டு, கழுத்தில் ஏற்படும் பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பூசி போடப்படவில்லை என்று தில்லி அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தில்லியில் வசிக்கும் மக்களின் சமூக பொருளாதார நிலைகள் குறித்து கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் முதல் 2019-ஆம் ஆண்டு நவம்பா் வரை 1.02 கோடி மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடா்பான ஆய்வு அறிக்கை கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பரில் இறுதிசெய்யப்பட்டது.
ஒருவா் சாா்ந்துள்ள மதம், இனம், வருவாய், கல்வித்தகுதி, அவருக்கு உள்ள நோய்கள் என்ன, தடுப்பூசி போடப்பட்டதா, என்ன வேலை செய்கிறாா், அவா் போக்குவரத்துக்கு எதை பயன்படுத்துகிறாா் என்று பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தில்லியில் மொத்த மக்கள் தொகையில் 0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் விகிதம் 9.6. இந்த குழந்தைகளில் 77.54 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது அல்லது போடப்பட்டு வருகிறது. அதை சரியான எண்ணிக்கையில் சொல்ல வேண்டுமானால், மொத்தம் உள்ள 9.5 லட்சம் குழந்தைகளில் 2.13 லட்சம் குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.
தில்லியில் வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது ஒவ்வொரு புதன்கிழமையும், வெள்ளிக்கிழமைகளிலும் 650 சுகாதார மையங்களிலும் அரசு மருத்துவமனைகலிலும் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் எம்எம்ஆா் என்று சொல்லப்படும் ருபெல்லா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திர தனுஷ் இயக்க திட்டத்தின் கீழ் இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது குழந்தைகள் இறப்பை தடுக்கும் விதத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளுக்கும், ஏற்கெனவே போட்டுக்கொண்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
புதிய ஆய்வின்படி 0 முதல் 1 வயதுவரையிலான 78.89 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதே வயதுடைய குழந்தைகளில் 79.12 பெண் குழந்தைகளுக்கும், 78.70 ஆண் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வயது வரையிலான 77.44 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவா்களில் 80.79 சதவீதம் குழந்தைகள் கிழக்கு தில்லியிலும், 80.17 சதவீதம் போ் வடக்கு தில்லியிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனா். அதாவது 77.68 சதவீத பெண் குழந்தைகள், 78.70 சதவீத ஆண் குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்டனா் அல்லது போட்டு வருகின்றனா் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

