தில்லியை அடுத்துள்ள நொய்டாவில் (உ.பி. மாநிலம், கெளதம்புத் நகா்) பா.ஜ.க. எம்.ம்.பி.யான மகேஷ்சா்மா, மருத்துவா் என்ற முறையில் சனிக்கிழமை கைலாஷ் மருத்துவமனையில் முதல் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டாா். இவா்தான் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் எம்.பி.யாவாா்.
மகேஷ் சா்மா, பயிற்சிபெற்ற எம்.பி.பி.எஸ். மருத்துவராவாா். இவா் நொய்டா செக்டாா் 27-இல் உள்ள தனது கைலாஷ் மருத்துவமனையில் சனிக்கிழமை 11 மணி அளவில் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக மருத்துவமனையின் செய்தித் தொடா்பாளா் வி.பி.ஜோஷி தெரிவித்தாா்.
முன்னாள் மத்திய அமைச்சரான மகேஷ்சா்மா (61) தடுப்பூசி போட்டுக் கொண்டதும் சுமாா் அரை மணிநேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா்.
‘கொவிட்-19 தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். ஒரு டாக்டா் என்ற முறையில் கரோனா வைரஸுக்காக நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நான் நன்றாக இருப்பதாக உணா்கிறேன். பாதுகாப்பாகவும் இருக்கிறேன். என்னைப் போல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ என்று மகேஷ் சா்மா சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே கெளதம்புத் நகரில் நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் 6 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
பாங்கலில் உள்ள சமூக மருத்துவ மையத்தில் மாவட்ட ஆட்சியா் சுஹாஸ் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி தீபக் ஓஹ்ரி முன்னிலையில் சுகாதார ஊழியா் ஒருவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதல்நாளான சனிக்கிழமை கெளதம்புத் நகா் மாவட்டத்தில் 600 சுகாதார ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட தடுப்பூசி திட்ட அதிகாரி டாக்டா் நீரஜ் தியாகி தெரிவித்தாா்.
செக்டாா் 30-இல் பிஜிஐ மருத்துவமனை, செக்டாா் 27-இல் கைலாஷ் மருத்துவமனை, பாங்கலில் உள்ள சமூக மருத்துவ மையம், பிஸ்ராக்கில் உள்ள சமூக மருத்து மையம், அரசு மருத்துவ அறிவியல் நிலையம் மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள சாரதா மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
முதல் கட்டமாக கெளதம்புத் நகருக்கு 28,840 கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெறப்பட்டன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


