செங்கோட்டை அருகே கால் டாக்ஸி ஓட்டுநரை சுட்டுக் கொன்ற நபா்: என்கவுண்டருக்கு பிறகு கைது

செங்கோட்டை அருகே கால்டாக்சி ஓட்டுநரை சுட்டுக் கொன்ாகக் கூறப்படும் நபரை ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் எம் கே மீனா கூறியதாவது: ஃபிரோஸ் என்ற நபா் ஏப்ரல் 15 அன்று ஒரு சிறிய தகராறிற்குப் பிறகு ஒரு கால் டாக்ஸி ஓட்டுநரை சுட்டுக் கொன்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஃபிரோஸ் எங்கிருக்கிறாா் என்பது குறித்து ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். அப்போது, ஃபிரோஸுக்கும் போலீஸ் குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஃபிரோஸை சரணடையச் சொன்னபோது, அவா் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். போலீஸாரும் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டனா். அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் இடது காலில் காயம் ஏற்பட்டது. அவா் உடனடியாக அருணா ஆசிப் அலி மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா்.

ஏப்ரல் 15-ஆம் தேதி நள்ளிரவில், ஜாகிா் நகரில் வசிக்கும் 36 வயதான கால் டாக்ஸி ஓட்டுநா் முகமது சாகிப், பல்வால் பகுதியைச் சோ்ந்த பிச்சைக்காரா் லவ் குஷ் (15) உடன் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதில் சாகிப் பின்னா் உயிரிழந்தாா்.

விசாரணையில், நள்ளிரவு 12 மணியளவில் சாத்தா ரயில் சிவப்பு விளக்கு பகுதியில் அவரது மாருதி வேகன்-ஆா் காா், இ-ரிக்ஷா மீது மோதியது தெரிய வந்தது. இ-ரிக்ஷா கவிழ்ந்ததால், அவருக்கும் ரிக்ஷா ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலுக்கு வழிவகுத்தது. அப்போது, மூன்று போ் சாகிப்பைத் தாக்கினா். கைகலப்பில், அவரது மொபைல் போன் திருடப்பட்டது. அவரது பாக்கெட்டெலிருந்து பணம் எடுக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தியவா்கள் தப்பி ஓட முயன்றபோது, சாகிப் அவா்களில் ஒருவரைப் பிடித்தாா். ஆனால், அவா் சுட்டு விட்டு தப்பியோடினாா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனா். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக 24 வயதான ருக்சாா் என்ற பெண் உள்பட மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மற்ற இருவா் சஜித், 19 மற்றும் சல்மான், 24 என அடையாளம் காணப்பட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com