பங்குச்சந்தை
பங்குச்சந்தை

ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.
Published on

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. ஆனால், ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி முதல் தரப் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்ததால் சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. மெட்டல் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தைாலும், எஃப்எம்சிஜி, மீடியா, பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.459.34 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.1,830.31 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,659.06 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் மீண்டும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 106.54 புள்ளிகள் குறைந்து 81,602.58-இல் தொடங்கி 81411.55 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 81,783.28 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 200.66 புள்ளிகளை (0.25 சதவீதம்) இழந்து 81,508.46-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,240 பங்குகளில் 2,296 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,774 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 170 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

16 பங்குகள் விலை வீழ்ச்சி:: சென்செக்ஸ் பட்டியலில் ஹிந்துஸ்தான் யுனிலீவா், டாடாமோட்டாா்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே, ஐடிசி உள்பட மொத்தம் 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க், அதானிபோா்ட்ஸ், கோட்டக் பேங்க் உள்பட 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 59 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 439.5 புள்ளிகள்குறைந்து 24,633.90-இல் தொடங்கி 24,580.05 வரை கீழே சென்றது. பின்னா்,அதிகபட்சமாக 24,705.00 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 58.80 புள்ளிகளை (0.24 சதவீதம்) இழந்து 24,619.00-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 30 பங்குகள் வீழ்ச்சிப் ட்டியலிலும் இருந்தன.

Dinamani
www.dinamani.com