சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 918.60 புள்ளிகள் உயர்ந்து 77,550.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்ந்து 24,050.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

மும்பை பங்குச் சந்தை - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 12:20 pm

மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் பலவீனமாக முடிவடைந்த பங்குச் சந்தை, இன்றைய வர்த்தகத்தில், சாதகமாக தொடங்கி, மீண்ட நிலையில், முடிவில் உயர்ந்து நிறவடைந்தன.

ஒரு இடைவெளி உடன் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் பரவலான வர்த்தகம் காணப்பட்டது. இந்த உத்வேகம், நிஃப்டி 50 குறியீட்டை 24,074.05 என்ற நிலையை எட்ட உதவியது, பிறகு நிஃப்டி இன்றைய உச்சத்திற்கு சென்று நிறவடைந்தன.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 918.60 புள்ளிகள் உயர்ந்து 77,550.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்ந்து 24,050.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, இன்டர்குளோப் ஏவியேஷன், ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் சன் பார்மா, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா மற்றும் எச்சிஎல் டெக் ஆகியவை சரிந்தன.

நிஃப்டி-யில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் அதே சமயம் கோல் இந்தியா, சன் பார்மா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா ஆகியவை பங்குகள் சரிந்தன.

துறைகளைப் பொறுத்தவரை, ஆட்டோ, மூலதனப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், ரியல்டி, பவர், எஃப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி, உலோகம், பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி உள்ளிட்ட பங்குகள் தலா 1 முதல் 2% வரை உயர்ந்தன. அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்பக் குறியீடு 1.7% சரிந்தன.

இதற்கிடையில், நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1.5 சதவீதம் உயர்ந்தன.

இந்த வாரத்தில், பிஎஸ்இ-யில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்தன. இது பிப்ரவரி 2021-க்குப் பிறகு சிறந்த வாராந்திர செயல்திறனைப் பதிவு செய்த நிலையில், தொடர்ந்து ஆறு வார கால தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

விப்ரோ நிறுவனமானது, தனது வாரியம் பரிந்துரைத்த அடிப்படையில், பங்குகளைத் திரும்ப வாங்குவது குறித்து பரிசீலிக்கும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 1% உயர்ந்தன. தேவ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் ரூ.26 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் கையகப்படுத்தியதை அடுத்து அதன் பங்குகள் தொடர்ந்து 7% உயர்ந்தன.

பவர் மெக் ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ரூ.296 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் கையகப்படுத்தியதை தொடர்ந்து அதன் பங்குகள் 9% உயர்ந்தன. 4வது காலாண்டு வருவாய் முடிவுகளை வெளியிட்டதைத் தொடர்ந்து டாடா டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.5% சரிந்தன.

ஏப்ரல் 16 அன்று நிதி திரட்டுவதற்கான முன்மொழிவை நிறுவனத்தின் நிர்வாகக் குழு பரிசீலிக்க உள்ள நிலையில், எச்.டி.எஃப்.சி. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்தன. 2026 நிதியாண்டிற்கான முன்பதிவுகள் வரவுகள் இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளதாக நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, கோத்ரேஜ் ப்ராப்பர்டீஸ் பங்குகள் 1.5% உயர்ந்தன. தனது முதல் மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து ஐஷர் மோட்டார்ஸ் பங்குகள் 3.2% உயர்ந்தன.

ரூ.23.18 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை கையகப்படுத்தியதை அடுத்து ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்தன. கிரிசில் நிறுவனம் தனது நீண்டகால கடன் மதிப்பீட்டை 'AAA' என்று உயர்த்தியதைத் தொடர்ந்து ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3% உயர்ந்தன.

அதானி எனர்ஜி, ஏதர் எனர்ஜி, ஏபிபி இந்தியா, ஹிட்டாச்சி எனர்ஜி, கம்மின்ஸ் இந்தியா, டைட்டன் கம்பெனி, எம்சிஎக்ஸ் இந்தியா, ஆனந்த் ரதி, நாட்கோ பார்மா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் எட்டியது.

தரவுகளின் அடிப்படையில், நேற்று (வியாழக்கிழமை) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 1,711.19 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 955.90 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை 0.57 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 96.47 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

After a weak closing in the previous session, the Indian equity indices rebounded strongly on April 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.