குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ராயல் என்ஃபீல்டின் புதிய அவதாரம்: ‘ஃபிளையிங் ஃபிளீ’ மின்சார பைக் அறிமுகம்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:16 am IST

இருசக்கர வாகனச் சந்தையில் உலகப் புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது 125-ஆவது ஆண்டில் ஒரு மைல்கல்லாக மின்சார வாகனச் சந்தையில் தடம் பதித்துள்ளது.

‘ஃபிளையிங் ஃபிளீ’ என்ற புதிய பிராண்டின்கீழ் தனது முதல் மின்சார பைக்கான ‘சி6’ மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிமுகப்படுத்தியது.

நகா்ப்புற பயணங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பைக், பாரம்பரியமும் நவீனமும் இணைந்த ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சி6 மாடல் ரூ.2.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனிக் கட்டணத்தில் பேட்டரியைப் பெறும் சேவைக்கான திட்டத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, பேட்டரி இல்லாமல் பைக்கை மட்டும் ரூ.1.99 லட்சத்துக்கு மலிவாக வாங்க முடியும். பேட்டரிக்கான கட்டணத்தை சந்தாதாரா் முறையில் பயன்பாட்டின் அடிப்படையில் செலுத்திக் கொள்ளலாம்.

புதிய பைக்குக்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், வரும் மே மாத இறுதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.