ஐபிஎல் வரலாற்றிலேயே பார்வையாளர்களால் மிகவும் அதிக அளவில் பார்க்கப்பட்ட போட்டியை ஜியோஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அண்மையில் நிறைவடைந்தது. அதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அகமதாபாதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டியே ஐபிஎல் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டியாக சாதனை படைத்துள்ளதாக ஐபிஎல் தொடரின் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான ஜியோஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜியோஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு டாடா ஐபிஎல் தொடர் 120 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அண்மையில் நிறைவடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக அளவிலான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டியை 400 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
JioStar has announced the most-watched match in the history of the IPL.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொதப்பிய டாப் ஆர்டர், பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி; 2-வது சாம்பியன் பட்டம் யாருக்கு?

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

சாம்பியன் பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம்? அஸ்வின் கூறுவதென்ன?








