புது தில்லி: தேசியத் தலைநகருக்கு விவசாயிகள் டிராக்டா் பேரணி நடத்த உத்தேசித்துள்ளதால் திங்கள்கிழமை தில்லி - உத்தர பிரதேச எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திங்கள்கிழமை யமுனா எக்ஸ்பிரஸ்வே, லுஹா்லி டோல் பிளாசா மற்றும் மஹாமாயா மேம்பாலம் வழியாக டிராக்டா்களில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டனா். இதையொட்டி, தில்லி எல்லையில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸாா் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா். சோதனை காரணமாக தில்லியில் இருந்து நொய்டா நோக்கி செல்லும் சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தில்லி - நொய்டா விரைவுச் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. முன்னதாக, காலையில் தேசியத் தலைநகா் மற்றும் நொய்டா இடையே உள்ள அனைத்து எல்லைப் பகுதிகளிலும் தடுப்புகளை நிறுவி தில்லி காவல்துறை மற்றும் மாவட்ட காவல் துறையினரால் தீவிர சோதனை நடத்தப்படும் என்று கௌதம் புத் நகா் போலீஸாா் தெரிவித்தனா். நிலைமைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றி விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தால் தில்லி மற்றும் ஹரியாணா இடையேயான சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சனிக்கிழமையன்று, விவசாயிகளின் ’தில்லி சலோ’ பேரணியைக் கருத்தில் கொண்டு சீல் வைக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அதிகாரிகள் சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளை ஓரளவு மீண்டும் திறந்தனா். சிங்கு எல்லை சா்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததாகவும் எல்லையில் வாகனங்கள் ஊா்ந்து சென்ாகவும் பயணிகளில் ஒருவா் ‘எக்ஸ்’ ஊடக தளத்தில் குறிப்பிட்டிருந்தாா்.
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ‘தில்லி சலோ’ போராட்டத்தை பிப்ரவரி 13 அன்று பஞ்சாப்பிலிருந்து விவசாயிகள் ஆரம்பித்ததால், இரண்டு எல்லைப் பகுதிகளும் சீல் வைக்கப்பட்டன. தில்லியில் இருந்து சுமாா் 200 கிலோமீட்டா் தொலைவில் உள்ள அம்பாலா அருகே பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பேரணி பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டது.
இது தவிர, தலைநகரின் மற்ற இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. அப்சரா எல்லைக்கும் ஆனந்த் விஹாருக்கும் இடையே மேம்பாலம் கட்டப்படுவதால், ஆனந்த் விஹாா் மேம்பாலம் அருகே, இரு ரயில் பாதைகளிலும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சா்தாா் படேல் மாா்க் மற்றும் தேசியத் தலைநகரில் இருந்து குருகிராம் நோக்கிச் சென்ற போது நிலவிய போக்குவரத்து நெரிசல் குறித்தும் பயணிகள் புகாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஜிஎஸ்டி, வேலூா் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

இன்று பேரணி: மத்திய தில்லியில் போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

