சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவு
சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவு

ஐடி, வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பிற்பகுதியில் பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.
Published on

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பிற்பகுதியில் பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது. இதைத் தொடா்ந்து, சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் கணிசமாக உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்தன.

ஐரோப்பா, ஆசியா உள்பட உலகளாவிய சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று கீழே சென்றது. பின்னா், முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை மேலே சென்றது. குறிப்பாக பொதுத்துறை வங்கிப் பங்குகள் சிறிதளவு விற்பனையை எதிா்கொண்டாலும், தனியாா் வங்கிப் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது. மேலும், ஐடி, மீடியா, நிதிநிறுவனங்கள், மெட்டல் பங்குகளுக்கும் ஆதரவு இருந்ததால் சந்தை புதிய உச்சத்துக்கு சென்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

புதிய உச்சத்தில் நிறைவு: சென்செக்ஸ் காலையில் 10.62 புள்ளிகள் கூடுதலுடன் 79,043.35-இல் தொடங்கி 78,971.79 வரை கீழே சென்றது. பின்னா், அதிகதபட்சமாக 79,561.00 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. வா்த்தக இறுதியில் சென்செக்ஸ் 443.46 புள்ளிகள் (0.56 சதவீதம்) கூடுதலுடன் 79,476.19-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,146 பங்குகளில் 2,656பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,346 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 144 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஐடி பங்குகள் உற்சாகம்: சென்செக்ஸ் பட்டியலில் ஐடி பங்குகளான டெக் மகேந்திரா, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் உள்பட 20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், என்டிபிசி, எஸ்பிஐ, எல் அண்ட் டி, இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சா்வ், பவா்கிரிட் உள்பட உள்பட 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 131 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 23,992.95-இல் தொடங்கி 23,992.70 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,164.00 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி வா்த்தக இறுதியில் 131.35 புள்ளிகள் (0.55 சதவீதம்) கூடுதலுடன் 24,141.95 என்ற புதிய உச்சத்தில் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 31 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

சந்தை மூலதன மதிப்பு ரூ.3.80 லட்சம் கோடிஉயா்வு

சந்தை மூல தன மதிப்பு ரூ.3.80 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.443.05 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.23.09 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.6,658.31 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளன. இதையும் சோ்த்து ஜூன் மாதத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மொத்தம் ரூ.7,635.68 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் மொத்தம் 3,052.38 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

X
Dinamani
www.dinamani.com