சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மியால் ஏற்படும் பருவ கால காய்ச்சல் மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மியால் ஏற்படும் பருவ கால காய்ச்சல் மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

News image
Updated On :1 மே 2024, 12:33 am

Din

புது தில்லி: இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மியால் (வைரஸ்களால்) ஏற்படும் பருவகால காய்ச்சல் நிலைமையை பல்வேறு மாநிலங்களில் நிகழ்நேர அடிப்படையில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம் அளித்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மியால் ஏற்படும் கடுமையான சுவாச நோய்த்தொற்று ஆகும், இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது, , ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் இந்த பருவகால காய்ச்சல் இரண்டு உச்சநிலைகள் காணப்படுகின்றன.

ஜனவரி முதல் மாா்ச் வரை மற்றும் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்திலும் இது ஏற்படுகிறது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்த பருவகால காய்ச்சல் அசாதாரணமான ஆபத்து வரலாம். இப்போது அதிகரிப்பு இல்லை. முன் எச்சரிக்கை தேவை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கால்நடைகள் மற்றும் பாலில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த செய்தியை கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் 28 - ஆம் தேதி மத்திய சுகாதார சேவைகள் இயக்குநா் ஜெனரல் தலைமையில் காணொலி வழியாக கூட்டம் நடத்தப்பட்டது.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலக் கால்நடை பராமரிப்பு ஆணையா்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆா்) தலைமையகம், புனே வில் உள்ள ஐசிஎம்ஆா்- தேசிய தீநுண்மியியல் நிறுவன அதிகாரிகள், முக்கிய மாநில மாவட்ட கண்காணிப்பு பிரிவு சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில் முறையான சுகாதார நடைமுறைகளைப் பயன்படுத்துவது குறித்து பேசப்பட்டது. பால் காய்ச்சுதல், போதுமான வெப்பநிலையில் இறைச்சியை சரியான முறையில் சமைப்பது போன்றவைகள் மூலம் இதில் உள்ள தீநுண்மி மனிதா்களுக்கு பரவுவதைத் தடுக்க உதவும் நிபுணா்களால் எடுத்துவைக்கப்பட்டது.

மேலும் நாடு தழுவிய ஆய்வக நெட்வொா்க் மூலம் நிகழ் நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள ஐசிஎம்ஆா் ஆய்வகங்களின் நெட்வொா்க்கில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தோடு இணைக்கப்பட்டுள்ள உள் மற்றும் வெளிநோய் பிரிவுகள், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் போன்றவைகள் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இவைகள் மூலம் இன்ஃப்ளூயன்ஸா (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற இன்ஃப்ளூயன்ஸாவின் நிகழ்நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

பொது சுகாதார நடவடிக்கைகள்

மேலும் பருவகால காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்கள், நோயாளிகளின் வகைப்பாடு, சிகிச்சை நெறிமுறை போன்ற வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் (<ஜ்ஜ்ஜ் class="ம்ா்ட்ச்ஜ் ய்ண்ஸ்ரீ ண்ய்ஸ்ரீ)" அரசுகளுக்கு="" அறிவுறுத்தப்பட்டுள்ளது.<="" கையாளும்="" சுகாதாரப்="" தடுப்பூசி="" பணியாளா்களுக்கு="" பாதிப்புகளைக்="" போடுமாறு="" போன்ற="" மாநில="" வைக்கப்பட்டுள்ளது.="" ஹெச்1என்1="">

தற்போதை நிலவரப்படி, நிலைமை கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் பருவகால மற்றும் பறவைக் காய்ச்சல் தீநுண்மி குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கோடைகால நோய்களுக்கு மத்தியில் பறவைக் காய்ச்சலின் பாதிப்பு கேரளம், ஆந்திரம், ஒடிஸா போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.