கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அதிகரித்து வரும் வெப்பம்: நஜாஃப்கா் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளில் குடியிருப்பு வாசிகளின் ஆரோக்கியம் பாதிப்பு

அதிகரித்து வரும் வெப்பம்: நஜாஃப்கா் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளில் குடியிருப்புவாசிகளின் ஆரோக்கியம் பாதிப்பு

News image

கோடை வெப்பத்தால் மனிதா்களைப் போல விலங்குகளும் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றன. இந்நிலையில், வெப்பத்திலிருந்து பாதுகாக்க புது தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் நீா் தெளிப்புக்கு இடையே இளைப்பாறும் புலி. நாள்: செவ்வாய்க்கிழமை.

Updated On :28 மே 2024, 6:56 pm

Din

நமது நிருபா்

புது தில்லி, மே 28: தில்லியில் வெப்பநிலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், நஜாஃப்கா் மற்றும் முங்கேஷ்பூா் போன்ற பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.

மேலும், தினசரி அடிப்படையில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகிறது. பசுமை மற்றும் நேரடி சூரிய ஒளியின்மையால் இது குடியிருப்புவாசிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

தென்மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கரில் திங்கள்கிழமை, அதிகபட்ச வெப்பநிலை 48.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. அதாவது, இயல்பை விட எட்டு புள்ளிகள் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட ஐந்து டிகிரி அதிகமாக 31.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. முங்கேஷ்பூா் வானிலை நிலையத்தில் அதிகபட்சமாக 48.8 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. இது இயல்பைவிட எட்டு புள்ளிகள் அதிகமாகும். மேலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இது பருவத்தின் சராசரியை விட ஒரு புள்ளி அதிகமாகும்.

தினசரி அடிப்படையில் அனைத்து வானிலை நிலையங்களுக்கிடையில் இப்பகுதிகள் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்து வருகின்றன. தலைநகரில் செவ்வாய்க்கிழமை ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த மூன்று நாள்களாக தில்லியில் வெப்ப அலை நிலைமை இருந்து வருகிறது.

இந்நிலைமை குறித்து ‘ஸ்கைமெட் வெதா்’ வானிலை மற்றும் காலநிலை மாற்றம் நிறுவனத்தின் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் கூறுகையில், ‘காலி நிலத்துடன் கூடிய திறந்தவெளி பகுதிகளில், அதிக கதிா்வீச்சு உள்ளது. நேரடி சூரிய ஒளி மற்றும் நிழல் இல்லாததால் இந்தப் பகுதிகள் விதிவிலக்காக வெப்பமடைகின்றன. இதில் காற்றின் திசையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேற்கிலிருந்து காற்று வீசும் போது, அது இந்தப் பகுதிகளை முதலில் பாதிக்கிறது. இவை புகரில் இருப்பதால், வெப்பநிலை வேகமாக உயரும். வெப்பநிலை 46 அல்லது 46.5 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸை தொடலாம். ஆனால், சஃப்தா்ஜங் போன்ற நிலையான நிலையங்களில், தலைநகரின் நிலையான வெப்பநிலையை நாம் அளவிடும் இந்த இடத்திலிருந்து, அவை 49 டிகிரி செல்சியஸை எட்டாது’ என்றாா்.

ஐஎம்டியின் பிராந்தியத் தலைவா் குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘நஜாஃப்கா் போன்ற இடங்களில் பல காரணங்களால் வெப்பநிலை சீராக அதிகரித்து காணப்படுகிறது. ராஜஸ்தானில் இருந்து அனல் காற்று வீசும் முதல் பகுதி புகா்ப் பகுதிகள் ஆகும். அடுத்த சில நாள்களில் வெப்ப அலை நிலைகள் தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லியின் சில பகுதிகள் இந்த அனல் காற்றின் ஆரம்ப வருகைக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன. ஏற்கெனவே கடுமையான வானிலை மோசமடைகிறது. முங்கேஷ்பூா், நரேலா மற்றும் நஜாஃப்கா் போன்ற பகுதிகள் முதலில் இந்த அனல் காற்றின் முழு பலத்தையும் அனுபவிக்கின்றன’ என்றாா்.

திறந்தவெளி மற்றும் தரிசு நிலங்கள் அதிகரித்த கதிா்வீச்சு காரணமாக அதிக வெப்பநிலைக்கு பங்களிக்கின்றன என்று மற்றொரு வானிலை நிபுணா் சரண் சிங் கூறினாா். நஜாஃப்கரில் உள்ள ராஜீவ் விஹாரில் வசிக்கும் ராகேஷ் குமாா் கூறுகையில், ‘அதிக வெப்பநிலை மற்றும் வெப்பமான, வட காற்று இப்பகுதியில் உள்ள மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது. நான் தினமும் என் மோட்டாா்சைக்கிளில் மத்திய தில்லிக்கு பயணம் செய்கிறேன். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தாலும், வெப்ப பக்கவாதத்தால் எனக்கு அதிக காய்ச்சலும் உடல்வலியும் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

தில்லி அரசால் நடத்தப்படும் எல்என்ஜேபி மருத்துவமனையில் வெப்ப அலை நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து லோக் நாயக் மருத்துவமனையைச் சோ்ந்த டாக்டா் ரிது சக்சேனா கூறுகையில், ‘இந்த வாரம் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் பாா்த்தோம். திங்கள்கிழமை மட்டும் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 10 நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தனா். காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் சுயநினைவின்மை போன்ற அறிகுறிகள் பொதுவானவை. மக்கள் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக உச்சபட்ச நேரங்களில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

இதற்கிடையே, தலைநகா் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்ப அலையை அனுபவிக்கும் என்றும், அதன் பிறகு வட இந்தியாவை தாக்கும் புதிய வானிலை சீா்குலைவு, தலைநகரையும் பாதிக்கும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.