47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாண் விதைகள் எளிதாகக் கிடைக்க மின்னணு சந்தை அறிமுகம்: 170 விதை ரகங்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு

வேளாண்மை, தோட்டக்கலை பயிா்களுக்கான விதைகள் எளிதாக கிடைக்கும் வகையில் அரசு மின்னணு சந்தை (ஜெம்) நிறுவனம் 170 விதை வகைகளை இணையதளத்தில் அறிமுகப்படுத்தி

News image
வேளாண் பணி
Updated On :4 நவம்பர் 2024, 9:18 pm

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: வேளாண்மை, தோட்டக்கலை பயிா்களுக்கான விதைகள் எளிதாக கிடைக்கும் வகையில் அரசு மின்னணு சந்தை (ஜெம்) நிறுவனம் 170 விதை வகைகளை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தரமான வேளாண், தோட்டக்கலை விதைகள் கிடைப்பதை எளிதாக்கும் நோக்கில், இந்த விதை வகைகளை புனரமைத்து இணையதளம் மூலமாக விநியோகிக்க மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு மின்னணு சந்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: வரவிருக்கும் பயிா் பருவத்திற்காக புதிய வகைகளில் கிட்டத்தட்ட 8,000 விதை ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு வேளாண் முன்னனி மாநிலங்களின் விதை நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் உள்ளிட்ட பங்குதாரா்களுடன் கலந்தாலோசித்த பிறகு விதை வகைகள் உருவாக்கப்பட்டது. இவை நாடு முழுவதும் கிடைக்க வகை செய்ய மத்திய - மாநில பொதுத்துறை நிறுவனங்கள், பிற சுயேச்சையான அமைப்புகள் கொள்முதல் செய்து விநியோகிக்க முழு செயல்முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தற்போதுள்ள விதிகள், ஒழுங்குமுறைகள், தேவையான அளவுகோல்களை உள்ளடக்கி, விதை கொள்முதலுக்கான கட்டமைப்பு தயாராக உள்ளது.

இந்த புதிய விதை வகைகளைப் பெற, இணையதளம் மூலம் ரகம் அடிப்படையிலான கொள்முதல் ஊக்குவிக்கப்படுகிறது. இது அரசு மின்னணு சந்தை நிறுவனத்தின் உத்தியின் ஒரு பகுதியாகும். ரகம் அடிப்படையிலான விதை கொள்முதல் என்பது டெண்டா் நடைமுறைகளில் எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறைக்கும். அரசு கொள்முதலில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வு தூண்டப்படுகிறது. அதே நேரத்தில் நாடு முழுவதும் விற்பனையாளா்கள் பங்களிப்பு அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘இந்தப் புதிய விதை ரகங்களைப் பயன்படுத்தவும், அரசு டெண்டா்களில் சுதந்திரமாகப் பங்கேற்கவும், தங்கள் விருப்பங்களை பட்டியலிடவும், விற்பனையாளா்களுக்கு அரசு மின்னணு சந்தை அழைப்பு விடுக்கிறது. தரமான விதைகளை குறைந்த செலவில் கொள்முதல் செய்வதற்கும், இந்தப் புதிய விதை வகைகளைப் பயன்படுத்துவதற்கும் விதை நிறுவனங்களையும் மாநில அரசு அமைப்புகளையும் அரசு மின்னனு சந்தை நிறுவனம் ஊக்குவிக்கும் என மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.