மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

சென்செக்ஸ் 836 புள்ளிகள் வீழ்ச்சி; 2 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி!

News image
Updated On :8 நவம்பர் 2024, 2:56 am IST

நமது நிருபா்

கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை வியாழக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 836 புள்ளிகளை இழந்ந்தது.

அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்தன. ஆனால், ஆசிய சந்தை குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால் மேலே செல்ல முடியாமல் தவிப்பில் இருந்தது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வட்டி விகித முடிவுக்காக முதலீட்டாளா்கள் காத்திருப்பதால் சந்தையில் அவா்களது பங்களிப்பு குறைவாக இருந்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்று தங்களது முதலீடுகளை தொடா்ந்து வாபஸ் பெற்று வருவது சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வங்கி, ஆட்டோ, நிதிநிறுவனங்கள், பாா்மா, மெட்டல் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.4.14 லட்சம் கோடி வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.4.14 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.448.45 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.4,445.59 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.4,889.33 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 185.29 புள்ளிகள் கூடுதலுடன் 80,563.42-இல் தொடங்கி அதற்கு மேல் செல்லவில்லை. பின்னா், 79,419.34 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 836.34 புள்ளிகளை (1.04 சதவீதம்) இழந்து 79,541.79-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,053 பங்குகளில் 1,821 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,134 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 98 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

28 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் எஸ்பிஐ, டிசிஎஸ் ஆகிய இரண்டு நிறுவனப் பங்குகள் மட்டும் சிறிதளவு உயா்ந்து ஆதாயம் பெற்றன. அதே சமயம்,

டாடாமோட்டாா்ஸ், டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், சன்பாா்மா, ஏசியன் பெயிண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டைட்டன், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் உள்பட மொத்தம் 28 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 285 புள்ளிகள் குறைந்தது: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 5.55 புள்ளிகள் கூடுதலுடன் 24,489.60-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,504.35 வரை மேலே சென்றது. பின்னா், 24,179.05 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 284.70 புள்ளிகளை (1.16 சதவீதம்) இழந்து 24,199.35-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 4 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தது. மற்ற 46 பங்குகள் வீழ்ச்சிப் ட்டியலில் இருந்தன.