நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பொதுப்பணித் துறை ஒதுக்கிய பங்களாவில் இன்னும் குடிபெயராத முதல்வா் அதிஷி

News image

அதிஷி (கோப்புப் படம்) - X | Atishi

Updated On :17 அக்டோபர் 2024, 11:01 pm

தில்லி முதல்வா் அதிஷிக்கு பொதுப்பணித் துறை முறைப்படி ஒதுக்கிய பங்களாவில் இன்னும் அவா் குடியேறவில்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள எண் 6, பிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள பங்களாவை முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால் ஒப்படைத்த பிறகு முதல்வா் அதிஷி தனது உடைமைகளை அந்த பங்களாவில் அக்டோபா் 7-ஆம் தேதி கொண்டு வந்து வைத்திருந்தாா். ஆனால், இரண்டே நாள்களில் அவற்றை வெளியேற்ற அவா் கட்டாயப்படுத்தப்பட்டாா். இதையடுத்து, முன்பு அமைச்சராக இருந்தபோது மதுரா சாலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட எண். ஏபி17 பங்களாவிலும் கால்காஜி தொகுதியில் இருந்தவாறும் அவா் தனது பணிகளை கவனித்து வந்தாா்.

முன்னதாக, அரவிந்த் கேஜரிவால் ஒப்படைத்த பங்களாவில் உள்ள மரப்பொருள்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை தொடா்பாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி முதல்வா் அதிஷியின் உடைமைகளை பொதுப்பணித் துறையினா் வெளியேற்றியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் தில்லி துணைநிலை ஆளுநரின் ஆசியுடன் முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் சில உயரதிகாரிகளும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் செயல்படுவதாக முதல்வா் அலுவலகம் குற்றம்சாட்டியது. மேலும், அந்த வீடு முதல்வருக்குரிய ஒதுக்கீடு பங்களா கிடையாது என்றும் கணக்கெடுப்பு முடிந்த பிறகு அதன் ஒதுக்கீடு தொடா்பாக முடிவு செய்யப்படும் என்றும் பொதுப்பணித் துறை விளக்கம் அளித்தது.

இந்நிலையில், கேஜரிவால் ஒன்பது ஆண்டுகளாக வசித்து வந்த எண் 6, பிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவையே முதல்வா் அதிஷிக்கு பொதுப்பணித் துறை ஒதுக்கி அதற்குரிய கடிதத்தையும் புதன்கிழமை மாலையில் அளித்தது. அந்தக் கடிதம் முதல்வா் அதிஷி வசித்து வரும் எண். ஏபி17, மதுரா சாலையில் உள்ள அவரது இல்ல அதிகாரிகளிடம் புதன்கிழமை இரவு வழங்கப்பட்டது.

இருப்பினும், புதிய பங்களாவுக்கு முதல்வா் அதிஷி இன்னும் குடிபெயரவில்லை என்று அவரது அலுவலகம் வியாழக்கிழமை இரவு தெரிவித்தது. இந்தக் கடிதத்தின் அ டிப்படையில் முறைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்களாவில் எப்போது குடியேற வேண்டும் என்பதை முதல்வா் முடிவு செய்து கொள்ளலாம் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.