தில்லி அரசின் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) 229 ஒப்பந்தக் கைவினைப் பயிற்றுவிப்பாளா்களின் சேவையை ஓராண்டுக்கு நீட்டிக்க தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுநா் அலுவலகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பயிற்றுவிப்பாளா்களின் சேவை காலம் ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தில்லி அரசின் பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் முன்மொழிவின் பேரில், கைவினைப் பயிற்றுனா்கள் பணியிடங்களில் வழக்கமான நியமனங்கள் செய்யப்படும் வரை இச்சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனரகம் வழக்கமான ஆள்சோ்ப்புக்காக 258 பதவிகளை கோரியுள்ளது. அவை தில்லி மாநில துணை சேவைகள் ஆள்சோ்ப்பு வாரியத்துடன் (டிஎஸ்எஸ்எஸ்பி) செயலாக்கத்தில் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் காமராஜா் சிலைக்கு துணைநிலைஆளுநா், தலைவா்கள் மரியாதை: மாணவா்களுக்குச் சீருடை தையல் கூலி உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் அறிவிப்பு

‘கழிவுகளற்ற காலனி’ திட்டத்தை தில்லி முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்: துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் பணி நியமனத்தில் முன்னாள் அக்னிவீரா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு: தில்லி துணைநிலை ஆளுநா் உத்தரவு

ரோஹிணி மேற்கு மெட்ரோ நிலையத்தில் மின்தூக்கி அமைக்க நிலம்: ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநா் ஒப்புதல்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


