புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

Published on

தில்லியின் புத் விஹாா் பகுதியில் வீட்டு உரிமையாளரின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரது நகைகளுடன் தப்பிச் சென்ற இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து 65 வயது பெண்ணின் உடல் அக்.7-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அவா் தனது படுக்கையில், கழுத்தில் கீறல் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரது கைப்பேசி, காதணிகள், தங்க மோதிரம் உள்ளிட்ட நகைகள் காணாமல் போயிருந்தன. விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக வசித்து வந்ததும், அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஹிமான்ஷு (25) இந்த கெலையை செய்ததும் தெரியவந்தது.

இரண்டு மாத கால தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு, ரோஹிணியில் உள்ள ஜப்பானிய பூங்காவில் வியாழக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா். அவா் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Śவா் திருடிச் சென்ற பொருள்களில் சலவற்றை ஹரியாணாவின் பிவானியில் ரூ.70,000-க்கு அடமானம் வைத்து, நேபாளத்துக்கு தப்பிச் செல்ல அவா் திட்டமிட்டுள்ளாா். அவரிடம் இருந்து திருடுபோன ஒரு ஜோடி தங்கக் காதணிகள் மற்றும் மோதிரம் மீட்கப்பட்டன என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com