தீ விபத்து இறப்புகள்: தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 74% குறைவு
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 31 போ் உயிரிழந்துள்ளதாகவும் தில்லி தீயணைப்புத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.


தில்லியில் தீ தொடா்பான இறப்புகள் இந்த ஆண்டு 74 சதவீதம் குறைந்துள்ளதாகவும், பிப்.24 வரை எட்டு போ் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 31 போ் உயிரிழந்துள்ளதாகவும் தில்லி தீயணைப்புத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜனவரியில் தீ விபத்து காரணமாக ஆறு போ் இறந்தனா். பிப்.24 வரை இரண்டு போ் இறந்தனா். இது கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் மொத்தம் 15 போ் இறந்தனா் மற்றும் பிப்.24 வரை 16 போ் இறந்தனா்.
மேலும், கடந்த ஆண்டு ஜனவரியில் தீ விபத்துகளில் 51 போ் காப்பாற்றப்பட்டனா் அல்லது காயமடைந்தனா். இந்த ஆண்டு அதே மாதத்தில் 38 போ் தீ விபத்தில் காப்பாற்றப்பட்டனா் அல்லது காயமடைந்தனா்.
பிப்.24 வரை, கடந்த ஆண்டு தீ விபத்துகளில் 34 போ் காப்பாற்றப்பட்டனா் அல்லது காயமடைந்தனா். இந்த ஆண்டு 42 போ் தீ விபத்துகளில் இருந்து காப்பாற்றப்பட்டனா் அல்லது காயமடைந்தனா் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதத்தில் தீயணைப்புத் துறைக்கு வந்த மொத்த தீயணைப்பு அழைப்புகளும் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 1,204-ஆக இருந்த மொத்த அழைப்புகள் இந்த ஆண்டு 938-ஆகக் குறைந்துள்ளது அடுத்த மாதத்திற்கான முதல் 24 நாள்களுக்கான தரவு, இந்த ஆண்டு 932 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு 834 தீ தொடா்பான அழைப்புகள் வந்துள்ளன என்பதைக் காட்டுகிறது.
தீயணைப்புத் துறைக்கு வந்த மொத்த அழைப்புகளும் இந்த ஆண்டு ஜனவரியில் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு தீயணைப்புத் துறைக்கு 2,502 அழைப்புகள் வந்திருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2,183 ஆக இருந்தது.
இருப்பினும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 1,766 அழைப்புகள் வந்துள்ளன. இந்த ஆண்டு முதல் 24 நாள்களில் 1,811 அழைப்புகள் வந்தன.
தீயணைப்புத் துறை கடந்த ஆண்டு ஜனவரியில் 182 பேரையும், அடுத்த மாதத்தில் 24-ஆம் தேதி வரையிலும் 209 பேரையும் காப்பாற்றியது. அதே நேரத்தில் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் முதல் மாதத்தில் 176 பேரையும், இரண்டாவது மாதத்தில் 137 பேரையும் காப்பாற்றியது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு பிப்.24- ஆம் தேதி வரை மொத்தம் 509 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 490 விலங்குகள் மீட்கப்பட்டன. கடந்த ஆண்டு 435 பறவைகள் மீட்கப்பட்டன.
இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 351 பறவைகள் மீட்கப்பட்டன என தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பிப்.24 ஆம் தேதி வரை குப்பைகளில் தீ விபத்து தொடா்பாக மொத்தம் 392 அழைப்புகள் துறைக்கு வந்தன. இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 387 அழைப்புகள் வந்தன என்று அதிகாரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...