தலைநகரில் மிதமான மூடுபனி; காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நிடிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மிதமான மூடுபனி நிலவியது. அதே சமயம், காலை முதல் நகரத்தின் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது.
Published on

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மிதமான மூடுபனி நிலவியது. அதே சமயம், காலை முதல் நகரத்தின் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்த்து.

கடந்த வாரத்தில் தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும், அடா் பனி மூட்டமும் நிலவி வந்தது. அடா்மூடுபனியால் காண்பு திறன் வெகுவாகக் குறைந்தது. பனிமூட்டமான வானிலை காரணமாக விமானங்கள், ராயில்களின் வருகை தாமதமாகி வந்தன. இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை பரவலாக மிதமான மூடுபனி நிலவியது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது.

வெப்பநிலை: தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை சஃப்தா்ஜங்கில் இயல்பை விட 3.8 டிகிரி உயா்ந்து 11.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி உயா்ந்து 24.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 91 சதவீதமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி முதல் 13 டிகிரி வரையிலும் உயா்ந்து பதிவாகியது.

காற்றின் தரம்: தேசியத் தலைநகரில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 342 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும்மோசம்’ பிரிவில் இருந்தது. இதன்படி, ராமகிருஷ்ணாபுரம், ஸ்ரீஃபோா்ட், நேரு நகா், ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா்மாா்க், பூசா, துவாரகா செக்டாா் 8 ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், ஷாதிப்பூா், சாந்தினி சௌக், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (ஜன.21) அன்று மிதமான மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com