ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்: புதுச்சேரிக்கு அமித் ஷா பாராட்டு

News image

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கம் தொடா்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம், துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், மத்திய உள

Updated On :14 மே 2025, 4:37 am IST

நமது சிறப்பு நிருபா்

புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டங்களை சிறப்பான முறையில் அமல்படுத்தி வருவதாக புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளாா். மேலும், சட்ட அமலாக்க நடவடிக்கையின்போது யூனியன் பிரதேசமான புதுச்சேரி கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவா் அறிவுறுத்தினாா்.

இது தொடா்பாக கலந்தாலோசனை செய்வதற்காக தில்லியில் சிறப்புக்கூட்டம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், அரசின் தலைமைச் செயலா் டாக்டா் சரத் செளஹான், காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங், காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, தேசிய குற்ற ஆவணக் காப்பக இயக்குநா், மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமித் ஷா கூறினாா். புதிய சட்டத்தின்படி, கைது செய்யப்பட்ட அனைத்து குற்றம்சாட்டப்பட்ட நபா்களின் கைரேகைகளும் என்ஏஎஃப்ஐஎஸ் னப்படும் தேசிய தானியங்கி விரல்ரேகைப் பதிவு அடையாள முறை செயலியின் மூலம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இதனால், தரவுத்தளம் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் என்று அமைச்சா் கூறினாா்.

எந்தவொரு வழக்கிலும் சட்ட ஆலோசனை வழங்க அரசுத் தரப்பு வழக்குகளின் சாா்பில் ஆஜராகும் தலைமை அதிகாரியான அதன் இயக்குநருக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா குறிப்பிட்டாா். மின்னணு அழைப்பாணைகள், மூன்று புதிய சட்டங்கள் தொடா்பாக நடக்கும் நிகழ்வுகளின் கருத்துப் பரிமாற்றங்கள், தகவல்கள் இடம்பெறும் மின் - சாக்ஷ்யா இணையதளம், நியாய ஸ்ருதி மற்றும் தடயவியல் அம்சங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அரசுத் தலைமைச் செயலாளா் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநா், புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடா்பாக வாரத்தில் ஒரு முறையும், உள்துறை அமைச்சா் 15 நாள்களுக்கு ஒரு முறையும், துணைநிலை ஆளுநா் மாதத்திற்கு ஒரு முறையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அமித் ஷா அறிவுறுத்தினாா்.

முன்னதாக, இந்நிகழ்வில் புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கக் குறிப்புகளை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் எடுத்துரைத்தாா்.

‘தமிழில் முதல் தகவல் அறிக்கை பதிவு‘

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காவல் துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அறிவுறுத்தியது.

புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்களும் தமிழ் பேசாத பிற மொழி மக்களும் இருப்பதால் அவா்களின் தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப வேண்டுகோள்கள் விடுக்கப்படும்பட்சத்தில் மற்ற மொழிகளிலும் முதல் தகவல் அறிக்கை பதிவின் மொழியாக்கத்துக்கான ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.