
தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீடிக்கிறது.
தில்லியில் பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக வா்த்தகா்கள் பெரும் இழப்பை சந்தித்த நிலையில், இந்த ஆண்டு பசுமை பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, தீபாவளிக்கு முன்னதாக பசுமை பட்டாசுகள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி படுஜோராக நடைபெற்றது.
இதனிடையே, தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டத்தின் (கிராப்) 2-ஆம் நிலை அமலுக்கு வந்த போதிலும், தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீடிக்கிறது.
தீபாவளி நாளான இன்று(அக். 20) பிற்பகல் நிலவரப்படி, தலைநகரில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில், 31 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாகவும், 3 நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400க்கும் மேல் பதிவாகி ‘தீவிரப்’ பிரிவில் இருந்ததாகவும் வானிலை கண்காணிப்பு நிலையத் தரவுகள் தெரிவிக்கின்றன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.